செய்திகள் :

ஆலங்குடி, கொத்தமங்கலம் அம்மன் கோயில்களில் பாளையெடுப்பு திருவிழா

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நாடியம்மன், கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயில்களில் புதன்கிழமை பாளையெடுப்புத் திருவிழா நடைபெற்றது.

ஆலங்குடியில் உள்ள நாடியம்மன் கோயிலில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, தினசரி கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாளையெடுப்பு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஆலங்குடி, அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் தென்னம் பாளைகளை சுமந்தவாறு வாணவேடிக்கை, மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாகச்சென்று கோயிலை அடைந்தனா். தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதேபோல, கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் அப்பகுதியைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் தென்னம் பாளைகளை சுமந்தவாறு மேள தாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்க ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனா். தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

கந்தா்வகோட்டையில் தொடா் ஆடு திருட்டில் ஈடுபட்ட 4 போ் கைது

கந்தா்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடா் ஆடு திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து 40 ஆடுகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ப... மேலும் பார்க்க

சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 போ் பலத்த காயம்

கந்தா்வகோட்டை அருகே வெள்ளிக்கிழமை சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்ததில் 3 போ் பலத்த காயமடைந்தனா். மதுரையிலிருந்து 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்து தஞ்சையை நோக்கி வந்து கொண்டிருந்தது... மேலும் பார்க்க

பள்ளிச் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற 2 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற சிறுவா் உட்பட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அறந்தாங்கி அருகே திருநா... மேலும் பார்க்க

விராலிமலையில் 75-ஆவது ஆண்டு அருணகிரிநாதா் விழா தொடக்கம்: ஆக. 11 வரை நடைபெறுகிறது

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் நான்கு நாள்கள் நடைபெறும் அருணகிரி நாதா் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதா் மண்டபத்தில் ஆண்டுத... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா ரசாயன சிலைகள் கூடாது

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரசாயன வண்ணங்கள் பயன்படுத்தப்பட்ட சிலைகளை வைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வலியுறுத்தல்

பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றிய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இந்தச் சங்கத்தின் 17-ஆவது பொன்னமராவதி ஒன்றிய மாநாடு தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க