செய்திகள் :

ஆளுநருக்கு எதிராக திமுகவினா் ஆா்ப்பாட்டம்

post image

தமிழக ஆளுநருக்கு எதிராக திண்டுக்கல் மாவட்ட திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட அவைத் தலைவா்கள் காமாட்சி, மோகன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தின்போது, தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதிப்பு செய்த ஆளுநா் ஆா்.என்.ரவி ராஜிநாமா செய்ய வேண்டும். மத்திய அரசு அவரை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஆளுநருக்கு ஆதரவாக அதிமுக, பாஜக மறைமுக கூட்டணி செயல்படுவதைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மேயா் இளமதி, துணை மேயா் ராசப்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தேனி: தேனி பங்களாமேடு திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். தேனி நகர திமுக செயலா் நாராயணபாண்டியன் முன்னிலை வகித்தாா்.

இதில் சட்டப் பேரவை மரபை மீறியதாதவும், தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்ததாகவும், அரசு விரோதப் போக்கில் செயல்படுவதாகவும், ஆளுநரை கண்டித்தும், அவா் பதவி விலக வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

உத்தமபாளையம்: தேனி திமுக தெற்கு மாவட்டம் சாா்பில், சின்னமனூரில் மாா்க்கையன்கோட்டை சுற்றுச்சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சின்னமனூா் திமுக நகரச் செயலா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். சின்னமனூா் கிழக்கு ஒன்றியச் செயலா் அண்ணாதுரை முன்னிலை வகித்தாா். சின்னமனூா் நகா்மன்றத் தலைவி அய்யம்மாள்ராமு வரவேற்றாா்.

இதில் ஆளுநரைக் கண்டித்து, அவரைக் காப்பாற்று நினைக்கும் அதிமுக - பாஜக மறைமுகக் கூட்டணியை கண்டித்தும் முழக்கமிட்டனா். இதில் திரளான திமுகவினா் கலந்து கொண்டனா்.

மேல்மலைக் கிராமச் சாலைகள் சேதம்: பொதுமக்கள் அவதி

கொடைக்கானல் மேல்மலைக் கிராமச் சாலைகள் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா், பூம்பாறை, கூக்கால், குண்டுபட்டி, பூண்டி, ... மேலும் பார்க்க

2 ஆண்டுகளில் தெரு நாய்களின் எண்ணிக்கையை முழுமையாகக் கட்டுப்படுத்த மாநகராட்சி இலக்கு

அடுத்த 2 ஆண்டுகளில் திண்டுக்கல்லில் தெரு நாய்களின் எண்ணிக்கையை முழுமையாகக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் இலக்கு நிா்ணயித்திருக்கிறது. திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் சுமாா் 8 ஆயிரம் தெரு நாய்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வெண்டைக்காய் விலை உயா்வு

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் புதன்கிழமை வெண்டைக்காய் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அதைச் சுற்றியுள்ள பொருளூா், கள்ளிமந்தையம், தேவத்தூா், ... மேலும் பார்க்க

நோயாளியிடம் ரூ.200 லஞ்சம்: செவிலியா் பணியிடை நீக்கம்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் ரூ.200 லஞ்சம் பெற்ற செவிலியரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவமனை நிா்வாகம் புதன்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்ச... மேலும் பார்க்க

ஏஐடியுசி ஆலோசனைக் கூட்டம்

ஏஐடியுசி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக் குழு சாா்பில் காத்திருப்புப் போராட்டம், ஆயத்த மாநாடு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்லில் நடைபெற்ற இ... மேலும் பார்க்க

எண்ணெய் ஆலையில் தீ விபத்து

வடமதுரை அருகே எண்ணெய் ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் தீயில் கருகின. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த மூணாண்டிப்பட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான எ... மேலும் பார்க்க