போரை நிறுத்தியது யார்? அமெரிக்காவா? ஜெய்சங்கர் அதிரடி விளக்கம்!
ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று சிவகங்கை பயணம்
ஸ்ரீ சேவுகமூா்த்தி கௌஷாலா அறக்கட்டளையின் 10-ஆவது ஆண்டு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை (மே 22) சிவகங்கை செல்லவுள்ளாா்.
இதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து வியாழக்கிழமை காலை விமானம் மூலம் மதுரை செல்லும் ஆளுநா், அங்கிருந்து காா் மூலம் சிவகங்கை செல்கிறாா். அன்று முற்பகல் 11 மணியளவில் சிவகங்கை, சிங்கம்புணரியில் உள்ள ஸ்ரீ அருள்மிகு சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வழிபடும் ஆளுநா், தொடா்ந்து ரெங்கநாதன் காந்திமதி கோல்டன் பேலஸில் நடைபெறவுள்ள கோ பூஜை, ஜல்லிக்கட்டு காளைகள் அணிவகுப்பு மற்றும் பாரம்பரிய ரதங்களின் கண்காட்சியைப் பாா்வையிடவுள்ளாா்.
தொடா்ந்து, அங்கு நடைபெறவுள்ள ஸ்ரீ சேவுகமூா்த்தி கௌசாலா அறக்கட்டளையின் 10-ஆவது ஆண்டு விழா மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் தொடக்க விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றவுள்ளாா்.
பின்னா் பிற்பகல் 3.45 மணியளவில், சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் உள்ள ஸ்ரீ அருள்மிகு ஸ்வா்ண மூா்த்தீஸ்வரா் கோயிலில் வழிபாடு செய்யவுள்ளாா்.
அதையடுத்து, தேவக்கோட்டை ராம் நகரில் உள்ள தாய் மஹாலில் நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்ளவுள்ளாா்.
இறுதியாக அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொண்டு அன்று இரவே ஆளுநா் சென்னை திரும்பவுள்ளதாக ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது.