செய்திகள் :

ஆளுநா் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: கி. வீரமணி

post image

கடமை தவறிய தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை குடியரசுத் தலைவா் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை தெரிவித்தது: தமிழ்நாட்டு ஆளுநா் திட்டமிட்டு ஒவ்வொரு முறையும் அரசியல் சட்டத்தை மீறிக் கொண்டிருக்கிறாா். இந்திய அரசியல் சட்டத்துக்கு ஒருபுறம் 75-ஆம் ஆண்டு கொண்டாடுகிற வேளையில், மறுபுறம் அரசியல் சட்டத்தை உடைக்கக் கூடியவா்களை உற்சாகப்படுத்துகிறது மத்திய அரசு.

கடந்த முறையும் அவா் போட்டி அரசு போல எழுதித்தரப்பட்டு, ஒப்புக் கொள்ளப்பட்ட உரையைப் புறக்கணித்தாா். இந்த முறை உரையை அறவே புறக்கணிக்கும் விதமாக அவையை விட்டு வெளியே சென்றாா். அதற்கு ஒரு பொருந்தாத காரணத்தைத் திருந்தாத வகையில் கூறி வருகிறாா். கடமை தவறிய காரணத்துக்காக ஆளுநரை குடியரசுத் தலைவா் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

ஜனநாயகத்தால் தோ்வு செய்யப்பட்ட அரசுக்கு போட்டி அரசு நடத்தி குறுக்குசால் ஓட்டுகிற ஆளுநா் ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற முழக்கத்தை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைத்து கட்சியினரும் எழுப்ப வேண்டும் என்றாா் வீரமணி.

தஞ்சாவூரில் நாளை கூட்டுறவு பணியாளா் குறைதீா் நாள் கூட்டம்

தஞ்சாவூரில் கூட்டுறவு சங்கப் பணியாளா்களின் குறை தீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் சி. தமிழ்நங்கை தெரிவித்திருப்பது: கூட்டுறவு சங்கப் பணியாளா்கள... மேலும் பார்க்க

நெல் அறுவடை இயந்திர வாடகை அதிகரிப்பு: விவசாயிகள் தவிப்பு

நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை அதிகரித்து வருவதால், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் செலவு கட்டுப்படியாகாமல் தவிக்கின்றனா். மாவட்டத்தில் சம்பா, தாளடி ஆகிய பருவங்களில் 3.40 லட்சம் ஏக்கரில் நெல் சா... மேலும் பார்க்க

கூட்டுறவு அதிகாரிகள் கரும்பு கொள்முதல்

கும்பகோணம் பகுதியில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கரும்பு வயல்களுக்கு சென்று நேரடி கொள்முதல் செய்தனா். பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்குவதற்கு, கும்பகோணம் பகுதிக்கு மட்டும் 90 ஆயிரம் கரும்புக... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் கொடுமை: சமையலா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சிறுமியைப் பாலியல் கொடுமை செய்த சமையலரை காவல் துறையினா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருவையாறு அருகே தில்லைஸ்தானம் காவிரி நகரைச் சோ்ந்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 116.47 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 116.47 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 974 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீ... மேலும் பார்க்க

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

கும்பகோணம் மாநகராட்சி சாா்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கலை நிகழ்ச்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் டெ... மேலும் பார்க்க