செய்திகள் :

ஆளும் கட்சிக்கு மட்டும் போராட்டத்துக்கு அனுமதியா? - தமிழிசை கேள்வி

post image

தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு மட்டும் போராட்டத்துக்கு அனுமதியா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டப் பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, திங்கள்கிழமை தொடங்கியது. அதன்படி சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவி எந்தவித உரையையும் நிகழ்த்தாமல் திரும்பிச் சென்றார்.

இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மாண்பை ஆளுநர் சீர்குலைப்பதாகவும், தமிழக முன்னேற்றத்தில் தடையாக இருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மாவட்டத் தலைநகரங்களில் திமுக முக்கிய தலைவர்கள் தலைமையில் இன்று(செவ்வாய்க்கிழமை) போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க | திமுக போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா? உயர்நீதிமன்றத்தில் பாமக முறையீடு

இதையடுத்து திமுக போராட்டத்திற்கு அனுமதி கொடுத்தது எப்படி? என முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

'தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பது பிரிவினைவாதம் என்று சொன்னால் அதை தமிழக அரசுதான் புதிதாக கற்பிக்க முடியும்.

வேங்கை வயல் விவகாரம், ஆண்ட பரம்பரை என திமுக அமைச்சரே கூறியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? திமுகவினர்தான் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள்.

கடந்த 10 நாள்களில் ஆயிரக்கணக்கான தலைவர்களும் தொண்டர்களும் கைதானார்கள். எங்களுக்கு போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் ஆளும் கட்சிக்கு அனுமதியா?

எந்த நிலையில் அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள்? நாங்கள் 5 நாள்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்? ஆனால் ஆளும் கட்சியினர் நேற்று அனுமதி பெற்று இன்று போராட்டம் நடத்துகிறார்கள்.

தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. தமிழகத்தில் ஜனநாயகம் இல்லவே இல்லை' என்று கூறினார்.

திருப்பதியில் பக்தர்கள் பலி: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழகத்தை... மேலும் பார்க்க

மின்மாற்றி திருட்டு! 25 நாள்களாக இருளில் மூழ்கியுள்ள கிராமம்!

உத்தரப் பிரதேசத்தின் பதாவுன் மாவட்டத்திலுள்ள சொறாஹா எனும் கிராமத்தில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) திருடப்பட்டதால் கடந்த 25 நாள்களாக அந்த கிராமவாசிகள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.சொறாஹா கிராமத... மேலும் பார்க்க

17 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட நபர் உயிருடன் கண்டுபிடிப்பு!

17 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட நபர் தற்போது உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.பிகார் மாநிலத்தின் டியோரியா பகுதியைச் சேர்ந்த நாதுனி பால் (வயது 50) எனும் நபர் கடந்த 2009 ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

சின்ன திரையில் முதல்முறை... கெட்டி மேளம் தொடரின் ஒளிபரப்பு தேதி!

சின்ன திரையில் முதல்முறையாக ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ள கெட்டி மேளம் தொடரின் ஒளிபரப்பு தேதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.தற்போது உள்ள சூழலில் இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளம் வயதினரையும் கவரும் வகையி... மேலும் பார்க்க

சபரிமலையில் இதுவரை 40 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்!

சபரிமலையில் நவம்பர் 16 முதல் தற்போது வரை 40.90 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக அருஷ் எஸ். நாயர் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத நிறைவையொட்டி டிசம்பர் 26-ல் மண்டல... மேலும் பார்க்க

ஆளும் கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா? காவல் ஆணையருக்கு எதிராக பாஜக வழக்கு!

ஆளும் கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதி வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்குத் தொடர்ந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவ... மேலும் பார்க்க