செய்திகள் :

ஆஸி.யின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி; தென்னாப்பிரிக்கா அபாரம்!

post image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டி20 போட்டி டார்வினில் இன்று (ஆகஸ்ட் 12) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்க அணி முதலில் விளையாடியது.

டெவால்டு பிரேவிஸ் சதம் விளாசல்

முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தது.

தென்னாப்பிரிக்க அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் டெவால்டு பிரேவிஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 56 பந்துகளில் 125 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ரன்களும், கேப்டன் அய்டன் மார்க்ரம் 18 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் பென் துவார்ஷூயிஸ் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 17.4 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் அதிகபட்சமாக 24 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அலெக்ஸ் கேரி 26 ரன்களும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 22 ரன்களும் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஸ்ச் மற்றும் குவெனா மபாகா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ககிசோ ரபாடா, அய்டன் மார்க்ரம், லுங்கி இங்கிடி, பீட்டர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசி அசத்திய டெவால்டு பிரேவிஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தென்னாப்பிரிக்க அணி 1-1 என சமன் செய்துள்ளது. மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 9 வெற்றிகளைப் பதிவு செய்து ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணியின் வெற்றிப் பயணத்துக்கு தென்னாப்பிரிக்க அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி வருகிற ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஷுப்மன் கில்!

South Africa won the second T20I against Australia by 53 runs.

ஐசிசி தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறிய திலக் வர்மா!

இந்திய பேட்டர் திலக் வர்மா ஐசிசியின் டி20 தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஹைதராபாதைச் சேர்ந்த திலக் வர்மா (22 வயது) மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2023-இல் அறிமுகமானார். ... மேலும் பார்க்க

சீல்ஸ் 6 விக்கெட்டுகள், ஹோப் 120..! 34 ஆண்டுகளுக்குப் பின் தொடரை வென்ற மே.இ.தீவுகள்!

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசிப் போட்டியில் வெற்றிபெற்று 34 ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடரைக் கைப்பற்றியது. மேலும் பார்க்க

விரைவில் ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர்; பேட்டிங் பயிற்சியைத் தொடங்கிய ரோஹித் சர்மா!

இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கியுள்ளார்.ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கடந்த ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்... மேலும் பார்க்க

2025-இல் 195 ஸ்டிரைக் ரேட், 57 சராசரி... உச்சத்தில் இருக்கும் டிம் டேவிட்!

ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் இந்தாண்டு டி20 கிரிக்கெட்டில் தனது உச்சத்தில் விளையாடி வருகிறார். ஆஸி.யைச் சேர்ந்த 22 வயதாகும் டிம் டேவிட் மொத்தமாக 286 டி20 போட்டிகளில் 5,604 ரன்கள் குவித்துள்ளார். இந்தா... மேலும் பார்க்க

பொன்னான வாய்ப்பு..! சதமடித்த டெவால்டு பிரெவிஸ் பற்றி ஏபிடி!

சதமடித்த டெவால்டு பிரெவிஸ் பற்றி ஏபிடி பொன்னான வாய்ப்பை ஐபிஎல் அணிகள் தவறவிட்டது எனக் கூறியுள்ளார். தெனாப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயதான வீரர் டெவால்டு பிரெவிஸ். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20... மேலும் பார்க்க

ஐசிசி டி20 தவரிசை: தீப்தி சர்மா முன்னேற்றம்; ஸ்மிருதி மந்தனா சறுக்கல்!

சர்வதேச மகளிர் டி20 போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி இன்று (ஆகஸ்ட் 12) வெளியிட்டுள்ளது.ஐசிசி வெளியிட்டுள்ள டி20 போட்டிகளுக்கான இந்த தரவரிசையில் இந்திய அணியில் தீப்தி சர்மா பந்துவீச்சாளர்களில் இரண்டாம் இ... மேலும் பார்க்க