விஜயா வாசகா் வட்டத்தின் கி.ரா. விருது வழங்கும் விழா: கோவையில் நாளை நடைபெறுகிறது
ஆஸ்கருக்கான போட்டியில் சூர்யாவின் மகள் இயக்கிய ஆவணப்படம்!
நடிகர் சூர்யாவின் மகள் தியா சூர்யா இயக்கியுள்ள “லீடிங் லைட்” எனும் ஆவணப்படம் ஆஸ்கருக்கு தகுதி பெறுவதற்காக, அமெரிக்காவில் திரையிடப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான சூர்யா - ஜோதிகாவின் மகள் தியா “லீடிங் லைட்” எனும் ஆவணப்படத்தை இயக்கியுள்ளார்.
#LeadingLight The untold stories of Women behind the scenes - A docu-drama that discusses the experiences of Women Gaffers of Bollywood. Screening for the 'Oscar qualifying run' at the Regency Theatre, LA, California ✨
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) September 26, 2025
Congratulations, our dearest #DiyaSuriya, on this… pic.twitter.com/84h9OSpz58
ஜோதிகா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த 13 நிமிட ஆவணப்படம், பாலிவுட் திரையுலகில் உள்ள லைட் வுமன்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், “லீடிங் லைட்” ஆவணப்படம் ஆஸ்கருக்கு தகுதி பெறுவதற்கான சுற்றில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் உள்ள ரீஜென்சி தியேட்டரில் இன்று (செப். 26) முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை மதியம் 12.00 மணிக்கு திரையிடப்படும் என 2டி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நானியின் தி பாரடைஸ்: 2 புதிய அறிவிப்புகள்!