செய்திகள் :

ஆஸ்கர் மேடையைக் கலக்கிய அனோரா! என்ன கதை?

post image

அனோரா திரைப்படம் ஆஸ்கர் விருது விழாவில் 5 விருதுகளைப் வென்று கவனம் ஈர்த்துள்ளது.

2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. விருது விழாவை நகைச்சுவை நடிகர் கேனன் ஓ பிரைன் தொகுத்து வழங்கினார்.

இதில் சிறந்த திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்குநர், நடிகை, திரைப்படம் என மொத்தமாக 5 விருதுகளை அனோரா திரைப்படம் குவித்தது.

ஆச்சரியமாக சிறந்த இயக்குநர், திரைக்கதை, படத்தொகுப்பு, சிறந்த படம் இயக்குநர் சான் பேகர் 4 ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிக்க: ஆஸ்கர் விருதை பாலியல் தொழிலாளிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்: அனோரா இயக்குநர்

மேலும், விருது வென்ற சான் பேகர் பாலியல் தொழிலாளிகளுக்கு விருதை சமர்ப்பிப்பதாக சொன்னதும், விழாவில் கலந்துகொண்டவர்கள் கைதட்டி தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அனோராவின் கதை

அமெரிக்காவின் ப்ரூக்ளின் பகுதியிலிருக்கும் பாலியல் தொழிலாளியான அனோரா என்கிற அனி மிகீவா (மிக்கி மேடிசன்) பார் ஒன்றில் ரஷிய பணக்கார பையனான வான்யா சக்காரோவைச் சந்திக்கிறாள். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் மோகம் தொற்றிக்கொள்ள, அனி அவனைத் தனியாக அறைக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு, இருவரும் உறவு வைத்துக்கொள்கின்றனர்.

இளவயதான வான்யா அனியின் உடல் கொடுக்கும் இன்பத்தில் திளைப்பதுடன் ஒரு வாரத்திற்கு அவளை 15 ஆயிரம் டாலருக்கு வாடகைக்கு பேசி, லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் சுற்றித்திருவது, விருப்பம்போல் உறவில் ஈடுபடுவது என கொண்டாட்டமாக இருக்கிறான். வான்யாவுக்குள் இருக்கும் குழந்தைத்தனம் அனியை ஈர்க்கிறது. ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர்.

ஒரு பாலியல் தொழிலாளியைத் தன் மகன் திருமணம் செய்வதா என வான்யா குடும்பத்தினர் கொந்தளிக்க, உள்ளூர் மதகுருவை வைத்து அவர்களின் திருமணத்தை ரத்த செய்வதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. ஒருபுறம் பணம், இன்னொருபுறம் சமூகம் என அனோரா இன்றைய இளம் தலைமுறையின் உணர்வுகளை சமூக கண்ணோட்டத்தில் ஆழமாகப் பேசுகிறது.

பொருளாதாரத்துக்கும் காதலுக்குமான இடைவெளிகளை நேர்மையாக இப்படம் பதிவு செய்திருப்பதாகவும் அனோராவாக நடித்த மிக்கி மேடிசன் இப்படத்தின் உயிர்நாடி என்றும் விமர்சகர்கள் பாராட்டுகின்றனர். அந்தளவு, கதையின் நோக்கம் மற்றும் நடிப்பிற்கு மிக்கி அபாரமான தேர்வாக இருந்திருக்கிறார்.

படத்தின் இயக்குநர் சான் பேகர் பல பாலியல் தொழிலாளிகளிடம் அவர்களின் கதைகள் மற்றும் வாழ்க்கைகளைக் கேட்டே இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். அதற்காகவே, ஆஸ்கர் விருதை பாலியல் தொழிலாளிகளுக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்ததுடன் பாலியல் தொழிலைக் குற்றமற்றதாக மாற்ற வேண்டும் என்கிற வேண்டுகோளையும் வைத்தார்.

5 ஆஸ்கா்களை அள்ளிச் சென்ற அனோரா!

சா்வதேச திரையுலகம், ரசிகா்களின் மிகுந்த எதிா்பாா்ப்புக்கு மத்தியில் ஆஸ்கா் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் ‘டால்பி’ அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இர... மேலும் பார்க்க

ஆஸ்கர் 2025: விருதைத் தவறவிட்ட தில்லி சிறுமிகளின் கதை!

தில்லியில் பின்னலாடை தொழிற்சாலையில் குழந்தை தொழிலாளா்களாக பணியாற்றும் 2 சகோதரிகளின் வாழ்வியலைக் காட்டும் அனுஜா, சிறந்த குறும்பட பிரிவில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், விருதுக்குத் தே... மேலும் பார்க்க

ஆஸ்கர் 2025: நிஜ நாயகா்களுக்கு கௌரவம்

நிகழாண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தின் தெற்கு வனப்பகுதிகளில் பயங்கர காட்டுத் தீ பரவியது. லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இந்தக் காட்டுத் தீயால் 28 பே... மேலும் பார்க்க

ஆஸ்கர் 2025: அனோரா படத்தின் கதை

நியூயாா்க் நகர கேளிக்கை விடுதிகளில் நடனப்பெண்ணாக பணிபுரியும் அனோரா, அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காக வந்த ரஷிய செல்வந்தரின் மகன் வன்யாவுடன் அறிமுகமாகிறாா்.ரஷிய மொழியை சரளமாக பேசும் பெண்ணாக, வான்யாவுடன... மேலும் பார்க்க

2025: ஆஸ்கர் விருதாளர்கள்

*1969-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக சிறந்த திரைப்பட பிரிவில் எமிலியா பெரெஸ், விக்கெட் ஆகிய 2 மியூசிகல் (பாடல்கள் நிறைந்த) திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இவ்விரு படங்களும் தலா 10 மற்றும் அதற்க... மேலும் பார்க்க

பிரக்ஞானந்தா - அரவிந்த் ’டிரா’

செக் குடியரசில் நடைபெறும் பிராக் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா - அரவிந்த் சிதம்பரம் ‘டிரா’ செய்தனா்.இதையடுத்து இருவருமே தலா 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிா்ந்... மேலும் பார்க்க