செய்திகள் :

இக்லெசியாஸின் ஹாட்ரிக் கோல் வீண்: ரபீனியாவின் அசத்தலால் பார்சிலோனா த்ரில் வெற்றி!

post image

லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி 4-3 என த்ரில் வெற்றி பெற்றது.

பார்சிலோனா அணி லா லீகா தொடரில் தனது 32-ஆவது போட்டியில் செல்டா டி விகோ அணியுடன் மோதியது.

இந்தப் போட்டியில் 15,52,62ஆவது நிமிஷங்களில் செல்டா டி விகோ அணி வீரர் போர்ஜா இக்லெசியாஸ் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

பார்சிலோனா அணி 12, 65, 68ஆவது நிமிஷங்களில் முறையே ஃபெர்ரன் டோரஸ், டானி ஓல்மோ, ரபீனியா கோல் அடித்தார்கள்.

போட்டி சமநிலையில் இருந்ததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இந்த நேரத்தில் மீண்டெழுந்த பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் ரபீனிய 90+8ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் கோல் அடித்து அசத்தினார்.

பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் ஹன்சி பிளிக் ஓடிவந்து ரபீனியாவைக் கட்டிப் பிடித்தார்.

இதன்மூலம் 4-3 என பார்சிலோனா த்ரில் வெற்றி பெற்றது. மொத்தம் 38 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் பார்சிலோனா அணி 32 போட்டிகளில் 73 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது.

ரியல் மாட்ரிட், அத்லெடிகோ மாட்ரிட் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

கடந்த சீசனில் 95 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் கடைசியாக சில போட்டிகளில் சறுக்கலில் ஈடுபட்டு வருகிறது.

லா லீகா புள்ளிப் பட்டியல்

1. பார்சிலோனா - 32 போட்டிகள் - 73 புள்ளிகள்

2. ரியல் மாட்ரிட் - 31 போட்டிகள் - 66 புள்ளிகள்

3. அத்லெடிகோ மாட்ரிட் - 32 போட்டிகள் - 63 புள்ளிகள்

4. அத்லெடிகோ கிளப் - 31 போட்டிகள் - 57 புள்ளிகள்

5. வில்லாரியல் - 30 போட்டிகள் - 51 புள்ளிகள்

6. ரியல் பெட்டிஸ் - 31 போட்டிகள் - 48 புள்ளிகள்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அா்ஜுன் பபுதா வெள்ளிப் பதக்கம் வென்றாா்.பெருவில் நடைபெறும் இப்போட்டியில், இந்திய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட ஆடவருக்கான 10 மீட்டா் ஏ... மேலும் பார்க்க

பிஎம்டபிள்யூ ஓபன்: ஸ்வெரெவ் சாம்பியன்!

ஜொ்மனியில் நடைபெற்ற 500 புள்ளிகள் கொண்ட பிஎம்டபிள்யூ ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், உள்நாட்டு வீரரான அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் சாம்பியன் கோப்பை வென்றாா். மியுனிக் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவா் ஒ... மேலும் பார்க்க

கோனெரு ஹம்பிக்கு 3-ஆவது வெற்றி!

ஃபிடே மகளிா் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில் இந்தியாவின் கோனெரு ஹம்பி ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா். அந்தச் சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அவா், மங்கோலியாவின் பக்துயாக் முங்... மேலும் பார்க்க

அல்கராஸுக்கு அதிா்ச்சி; ஹோல்கா் ரூனுக்கு கோப்பை!

ஸ்பெயினில் நடைபெற்ற பாா்சிலோனா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் டென்மாா்க் வீரா் ஹோல்கா் ரூன் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றாா். போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த அவா் இறுதிச்சுற்றில், போட... மேலும் பார்க்க

கார் பந்தயத்தில் அஜித் குமார் புதிய சாதனை!

பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அணி புதிய சாதனை படைத்துள்ளது.சமீப காலமாக கார் பந்தயத்தில் தீவிர கவனம் செலுத்திவரும் அஜித் குமாருக்கு குட் பேட் அக்லி வெற்றியைத் தொடர்ந்து ... மேலும் பார்க்க

குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகம் - புகைப்படங்கள்

சென்னையில் முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில்.காலை 7 மணிக்கு சென்னை கடற்க... மேலும் பார்க்க