இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி
இசையமைப்பாளர் தமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது!
சபரிமலையில் மகரவிளக்கு தினத்தில் மலையாள இசையமைப்பாளர் கைப்பிரதம் தாமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.
ஹரிவராசனம் விருது கேரள அரசும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து நிறுவிய விருதாகும். இசையின் மூலம் சபரிமலை சமயச் சார்பின்மை, சமத்துவம், உலகளாவிய சகோதரத்துவம் ஆகியவற்றைப் பரப்பும் பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, ஏராளமான ஐயப்ப பக்தி பாடல்களையும் கைதப்பிரம் தாமோதரன் நம்பூதிரி எழுதி இசையமைத்துள்ளார். விருது வழங்கும் விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பிகே.சேகர் பாபுவும் கலந்துகொண்டு விருதினை வழங்கினார்.
ஹரிவராசனம் விருது 2012 ஆம் ஆண்டு கேரள அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முதல் விருது ஹரிவராசனம் பாடல் பாடிய பிரபல பாடகர் யேசுதாஸுக்கு வழங்கப்பட்டது.
2021-ல் தமிழ்ப் பின்னணிப் பாடகர் வீரமணி ராஜுவுக்கும், 2022-ல் பாடலாசிரியரும் இசையமைப்பாளருமான அழப்பு ரங்கநாதனுக்கும், 2023 ஆம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது பாடலாசிரியர், இயக்குனர் மற்றும் நாவலாசிரியர் ஸ்ரீகுமரன் தம்பிக்கும், கடந்த ஆண்டு பி.கே.வீரமணி தாஸுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.