செய்திகள் :

``இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்பதை ஒருபோதும் நான் ஏற்க மாட்டேன்'' - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

post image

'இட ஒதுக்கீட்டை பற்றிய ஒரு தவறான புரிதல் உள்ளது. இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன்' என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியிருக்கிறார்.

தனியார் கல்லூரியில் மாணவர்கள் உடனான கலந்துரையாடலின் போது பேசிய அவர், "இட ஒதுக்கீட்டை பற்றிய ஒரு தவறான புரிதல் இருக்கிறது. நிறையே பேர் என்ன நினைக்கிறார்கள் என்றால் நான் 95 எடுத்தேன், நீங்கள் 70 மார்க் தான் எடுத்திருக்கீர்கள்.

ஆனால் 95 மதிப்பெண் எடுத்த என்னை ஒதுக்கிவிட்டு 70 மதிப்பெண் எடுத்த அவர்களுக்கு சீட் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். இது அவர்களுக்கான கோபம். ஆனால், 75 எடுத்தவர் ஒரு காலில் ஓடிக்கொண்டு இருக்கிறார். 95 எடுத்தவர் இரண்டு காலில் ஓடிக்கொண்டு இருக்கிறார்.

நான் இரண்டு காலில் ஓடி முதலிடம் வந்தேன். ஆனால் 50 மீட்டரில் உங்களுக்கு வெற்றி என்று சொல்லிவிட்டார்கள் என சொல்லக்கூடாது. அவர்களை எப்போது இரண்டு காலில் ஓட வைக்கிறமோ அதுவரைக்கும் ரிசர்வேஷன் என்பதை இந்த நாட்டில் இருந்து நாம் எடுக்க முடியாது.

இடஒதுக்கீடு கொடுத்ததால் தரம் குறைந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். ஆனால் இதை நான் ஏற்கவில்லை. இட ஒதுக்கீடு கொடுத்ததால்தான், பிசி, எம்.பி.சி, எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவுகளில் இருந்த புத்திசாலித்தனமானவர்கள் வந்திருக்கிறார்கள். அதனால் இதை பொத்தாம் பொதுவாக பேசமுடியாது. இதை தரவுகள் வைத்துதான் பேச முடியும். இட ஒதுக்கீடு இல்லையென்றால் அந்த குடும்பம் எல்லாம் தரையோடு தரையாக போய்விடும்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

இட ஒதுக்கீடு கொடுப்பதால் தரம் குறைகிறது என்ற வாதத்தை நான் எந்த காலத்திலும் ஏற்க மாட்டேன். அந்த மாதிரி ஒன்று கிடையவே கிடையாது. நாடு முன்னேற எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேறும். அந்த வாய்ப்பை கொடுப்பதற்கு இட ஒதுக்கீடு என்பது ரொம்ப முக்கியம். இதுதான் உண்மை" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

தூய்மைப் பணியார்கள் போராட்டம்: `துறை அமைச்சர் பேசவில்லையா? முதல்வர் சொன்ன விஷயம்'- கே.என்.நேரு பதில்

எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 11 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், த.வெ.க தலைவர்... மேலும் பார்க்க

சமூக விரோதிகளின் கூடாரமாகும் ஆண்டிபட்டி வாரச் சந்தை கடைகள்; அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 100-150 கிராம மக்கள் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் இந்த காய்கறி சந்தைக்குத்... மேலும் பார்க்க

Stray Dogs: ``ரூ.15,000 கோடி இருக்கிறதா?'' - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மேனகா காந்தி கேள்வி

தெருநாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.நேற்றைய விசாரணையில், ``தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வலர... மேலும் பார்க்க

Stray Dogs: "நாய்களைப் பாதிக்கும்; ஒரே வழி..." - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பீட்டா அமைப்பு எதிர்வினை

தெரு நாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.நேற்றைய விசாரணையில், ``தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வல... மேலும் பார்க்க

Roundup: தீவிரமடையும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் டு கர்நாடக அமைச்சரின் ராஜினாமா வரை|11.8.2025

ஆகஸ்ட் 11 முக்கியச் செய்திகள்!எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 11 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வ... மேலும் பார்க்க

`பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவுநீர்' 3 மாவட்ட கலெக்டர்களிடம் காட்டமான உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக செல்லும் பாலாற்றில், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவுகளை கலப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதா... மேலும் பார்க்க