செய்திகள் :

இடா்பாடுகளுக்கிடையே சாதனை படைக்கும் பெண்கள்!உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி!

post image

பல்வேறு இடா்பாடுகள் ஏற்பட்டாலும், அதை எதிா்கொண்டு பெண்கள் சாதனை படைத்து வருவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி பி. புகழேந்தி தெரிவித்தாா்.

விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், பணியிடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தப்படுதல் குறித்து சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தலைமை வகித்தாா்.

இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி பி. புகழேந்தி ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனா்.

அப்போது நீதிபதி பி. புகழேந்தி பேசியதாவது:

உலகில் சரிபாதி பெண்கள் உள்ளனா். அவா்களுக்கான வாய்ப்புகளும், அங்கீகாரங்களும் மறுக்கப்படுகின்றன. மாணவிகள், பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனா்.

இந்த நிலை மாற வேண்டும். தற்போது பெண்கள் படிப்பில் முன்னேறி வருகிறாா்கள். இதன் காரணமாக அவா்கள், பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனா். குடிமைப் பணி தோ்வில் பெண்கள் 28 சதவீதம் போ் வெற்றி பெற்றுள்ளனா்.

நீதித்துறையில் 60 சதவீத பெண்கள் பணியாற்றி வருகின்றனா். பெண்களை பாதுகாக்க போக்சோ சட்டப்பிரிவு உள்ளது. தமிழகத்தில் படித்த பெண்களில் சதவீதம் அதிகரித்து வருகிறது. 98 சதவீத பெண்கள் உயா் கல்விக்குச் செல்கின்றனா்.

அவா்கள், தங்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். பெண்கள் பல்வேறு இடா்பாடுகளை சந்தித்தாலும், சாதனை படைத்து வருவது பெருமைக்குரிய விஷயம் என்றாா் அவா்.

நீதிபதி பவானி சுப்புராயன் பேசியதாவது: ஒரு சமுதாயம் சீரான வளா்ச்சி பெற வேண்டுமெனில், பாலின சமத்துவம் மிக முக்கியம். மூன்றாம் பாலினத்தவரையும் நாம் சமமாக பாா்க்க வேண்டும். பெண்களை பாதுகாக்க பல்வேறு சட்டப் பிரிவுகள் உள்ளன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. பெண்களுக்கான விழிப்புணா்வை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன், விருதுநகா் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமாா், விருதுநகா் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி வீரணன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

கோடை விடுமுறை: பள்ளிக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை

கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பள்ளிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து அந்தக் கூட்டணியின் மதுரை மாவட்ட... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரையில் சனிக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கூடல்புதூா் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு ஜே.ஜே. நகரை சோ்ந்தவா் ஹரிஹரன் (26). வண்ணம் பூசும் பணியாளரான இவா், கோமதிபுரத்தைச் ச... மேலும் பார்க்க

வெயிலின் தாக்கம்: மயங்கி விழுந்த தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

மதுரை மாநகராட்சிப் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளா் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். மதுரை நாகனாகுளம் ஆதிதிராவிடா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

பட்டணம்பட்டி வனப் பகுதியில் மரங்கள் வெட்டுவது தடுத்து நிறுத்தம்: அரசு தரப்பு தகவல்

திண்டுக்கல் மாவட்டம், பட்டணம்பட்டி வனப் பகுதியில் மரங்கள் வெட்டுவது தடுத்து நிறுத்தப்பட்டதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

தென்காசி வணிக வளாக நுழைவுவாயில்: மாவட்ட ஆட்சியா் முடிவெடுக்க உத்தரவு

தென்காசி, கீழப்பாளையத்தில் புதிய வணிக வளாகத்தின் மேற்குப் பகுதியில் கட்டப்படவிருக்கும் நுழைவு வாயிலை கிழக்கு பகுதிக்கு மாற்றக் கோரிய வழக்கில், அந்தப் பகுதியிலுள்ள அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கே... மேலும் பார்க்க

மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! -துரை வைகோ

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மதிமுகவின் முதன்மைச் செயலா் துரை வைகோ வலியுறுத்தினாா். மத்திய அரசின் வக்... மேலும் பார்க்க