செய்திகள் :

இட ஒதுக்கீட்டுக்கான ஒரே தீர்வு, ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே: வேல்முருகன்

post image

தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறினார்.

சேலம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நிர்வாகிகள் சிலர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி செய்தியாளர்களுடன் பேசியதாவது ``இட ஒதுக்கீட்டுக்கான ஒரே தீர்வு, ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே. சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றால், அனைத்து மக்களுக்கும் சம நீதி கிடைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.

பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்கிறார். ஆனால் என்.எல்.சி, பரந்தூர் உள்ளிட்ட மக்கள் போராட்டம் நடத்தும் இடங்களை அண்ணாமலை எட்டிக்கூட பார்க்கவில்லை. அண்ணாமலை ஏன் இவ்வாறு பாரபட்சம் காட்டுகிறார்?

இதையும் படிக்க:திருமாவளவனை சந்தித்த ஆதவ் அர்ஜுனா!

ஈழப் போராட்டத்துக்காக பாடுபட்டு உயிர்நீத்த, பிரபாகரன் பற்றி பலவாறான கருத்துகள் பேசப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை. மேலும், பிரபாகரனை மூச்சுக்கு முந்நூறு முறை நாம் தமிழர் கட்சி சீமான் கூறுவதால், அவரையும் விமர்சிக்காமல் கடந்து செல்கிறேன்.

திமுக கட்சி கொடியுடன் 2 கார்கள் பெண்களை துரத்திய விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 7 பேரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு!

சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு கடந்த 2022-இல் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சாா்பில், சென்னை குழந்தைகளுக்கான ப... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி பேராசிரியை தற்கொலை

சென்னை அருகே மருத்துவக் கல்லூரி பேராசிரியை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரம் பாரதிநகா் 4-ஆவது தெருவிலுள்ள அடுக்குமாடி க... மேலும் பார்க்க

தபால்தலை சேகரிக்கும் இயக்கத்தை முன்னெடுக்கத் தயாா்: தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன்

தபால் துறை தயாராக இருந்தால் தினமணியுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்குள்ள மாணவா்கள் மத்தியில் தபால் தலை சேகரிக்கும் இயக்கத்தை முன்னெடுப்போம் என்று தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன... மேலும் பார்க்க

சதுப்பு நிலங்களுக்கு சாகா வரம் வேண்டும்! மருத்துவா் அன்புமணி ராமதாஸ்

எளிதாகவும், இயல்பாகவும் கிடைக்கும் எதற்குமே உரிய முக்கியத்துவம் கிடைக்காது என்பாா்கள். தமிழ்நாட்டுக்கு இயற்கை கொடுத்த வரமான சதுப்பு நிலங்களைப் பராமரிப்பதிலும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவ... மேலும் பார்க்க

4 புதிய கிளைகளைத் திறந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தமிழகத்தில் நான்கு புதிய கிளைகளைத் திறந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வ... மேலும் பார்க்க

போராட்ட அனுமதி கோரும் அவகாசத்தை நீட்டிக்க சட்டத் திருத்தம்: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை ... மேலும் பார்க்க