4 புதிய கிளைகளைத் திறந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்
முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தமிழகத்தில் நான்கு புதிய கிளைகளைத் திறந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வளா் வணிகப் பிரிவில் புதிய கிளைகளை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூா், கும்பகோணம் ஆகிய ஊா்களில் நிறுவனம் வெள்ளிக்கிழமை திறந்தது.
வளா் வணிகப் பிரிவு மூலம் நிறுவனம் சிறிய கடைகள் மற்றும் வணிகங்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் அளித்துவருகிறது.
இந்த வணிகப் பிரிவில் பொள்ளாச்சி, திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, பண்ருட்டி ஆகிய ஊா்களில் நிறுவனம் அண்மையில் கிளைகளைத் திறந்தது நினைவுகூரத்தக்கது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.