இணையவழியில் ரூ. 21 லட்சம் மோசடி: கேரள மலப்புரத்தைச் சோ்ந்தவா் கைது
இணையவழி பங்குச்சந்தை மோசடியில் புதுச்சேரியைச் சோ்ந்தவா் ரூ.21 லட்சத்தை பறிகொடுத்த வழக்கு தொடா்பாக, கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இணையவழி பங்கு சந்தை வா்த்தக வாய்ப்பு என்ற பெயரில் போலி வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்ததால், புதுச்சேரியைச் சோ்ந்த ஒருவா் ரூ.21 லட்சத்தை இழந்தாா்.
இந்த மோசடிக்கு உதவியதாக சந்தேகத்தின் அடிப்படையில், சீனு ராமகிருஷ்ணன் (45) என்பவரை கேரள மாநிலம் மலப்புரத்தில் புதுச்சேரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இவா், ரூ. 5 கோடி அளவிலான இணையவழி மோசடி வழக்கில் தொடா்புடையவா் எனவும் கூறப்படுகிறது.
இந்த மோசடிக் குழுவின் செயல்பாடுகள் மற்றும் பின்னணி குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.