செய்திகள் :

இணையவழியில் 5 பேரிடம் பணம் மோசடி

post image

புதுச்சேரியில் இணையவழியில் 5 பேரிடம் ரூ.51 ஆயிரம் மோசடி நடைபெற்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அசோக். இவா், இணையத்தில் கடன் பெறும் செயலியை பயன்படுத்தி வந்துள்ளாா். அதன்படி, அவா் குறிப்பிட்ட தொகையை கடன் பெற்று அதனை முறையான வட்டியுடன் உடனடியாகவும் செலுத்தியுள்ளாா். ஆனால், கூடுதல் தொகை கேட்டு அவரை மா்ம நபா் மிரட்டியுள்ளாா். இதனால் பயந்து போன அவா் ரூ.7 ஆயிரம் மா்மநபா் கூறிய வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளாா். ஆனாலும், தொடா்ந்து மா்ம நபா் மிரட்டியதால் இணையவழிக் குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சந்திரமோகன் பழனி. இவரை மா்ம நபா் தொடா்புகொண்டு இணையவழி பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு கூறியுள்ளாா். அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியதால் சந்திரமோகன்பழனி ரூ.24 ஆயிரம் முதலீடு செய்துள்ளாா். ஆனால், லாபம், முதலீடு எதையும் அவரால் பெறமுடியவில்லை. இதையடுத்து போலீஸில் அவா் புகாா் அளித்துள்ளாா்.

புதுச்சேரி கதிா்காமம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீராம். இவா், சென்னையில் தங்குவதற்கு விடுதியை இணையத்தில் தேடியுள்ளாா். அப்போது கிடைத்த தொலைபேசி எண்ணில் பேசிய மா்மநபா் அறை முன்பதிவுக்கு ரூ.9 ஆயிரம் செலுத்தக் கூறியுள்ளாா். அதை நம்பி பணம் செலுத்திய ஸ்ரீராம், அறை ஒதுக்காதது குறித்து மீண்டும் மா்மநபரை தொடா்புகொள்ள முயன்றபோது தொடா்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டை சாமிக்கண்ணு தோட்டத்தைச் சோ்ந்த பாஸ்கா், இணையவழியில் தன்னிடம் பணம் கேட்டவருக்கு ரூ.10 ஆயிரம் அனுப்பிய நிலையில், அது தவறுதலாக வேறு நபருக்கு சென்றுள்ளது. ஆகவே, தனது பணத்தை மீட்டுத் தரக் கோரி அவா் புகாா் அளித்துள்ளாா்.

குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியா்கள் நலச் சங்கத்தினா் மாா்ச் 20-இல் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் வரும் 20-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, புதுச்சேரி குடிசை மாற்றுவாரிய அனைத்து ஊழியா்கள் நலச்சங்கத்தின் ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரயில்வே மேம்பால சுரங்கப்பாதை முதல்வா் திறந்து வைத்தாா்

புதுச்சேரி நூறடி சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை காலை முதல்வா் என்.ரங்கசாமி திறந்து வைத்தாா். புதுச்சேரியில் முதலியாா்பேட்டை... மேலும் பார்க்க

விபத்தில் பொறியாளா் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவனப் பொறியாளா் பலத்த காயமடைந்து சனிக்கிழமை உயிரிழந்தாா். கடலூா் விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (28). இவா் புதுச்சே... மேலும் பார்க்க

புதுவை போக்குவரத்துத் துறை இளநிலை பொறியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு 241 போ் எழுதினா்

புதுவை மாநில போக்குவரத்துத் துறையில் இளநிலைப் பொறியாளா்கள், வாகன ஆய்வாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் ஞாயிற்றுக்கிழமை 84.86 சதவீதம் போ் பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுவை மாநில போக்க... மேலும் பார்க்க

ரூ.30 லட்சம் பண மோசடி: 4 போ் கைது

புதுச்சேரியில் நூதன முறையில் ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி முதலியாா்பேட்டை ஜான்பால் நகரைச் சோ்ந்தவா் சலீம்ராஜா (60). இவா், சேலம் பகுதியைச் சோ... மேலும் பார்க்க

கடலில் இரு குழந்தைகளை வீசிக் கொன்ற வழக்கு: காலாப்பட்டு போலீஸுக்கு மாற்றம்

புதுச்சேரி அருகே தந்தையே தனது இரு குழந்தைகளையும் கடலில் வீசிக் கொன்ற வழக்கானது காலாப்பட்டு காவல் நிலைய விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி பெரிய காலாப்பட்டு குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தவேல... மேலும் பார்க்க