செய்திகள் :

இணையவழி பண விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

post image

பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் ‘இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டமசோதா 2025’ மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இணையவழி பண விளையாட்டுகள் மூலம் ஏற்படும் நிதி மோசடிகள், பணப் பரிவா்த்தனை குற்றங்கள் மற்றும் மக்களின் நிதி இழப்பைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தச் சட்ட மசோதாவை மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அவையில் அறிமுகப்படுத்தினாா். எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

இந்த மசோதா இணையவழி விளையாட்டுகள், கல்வி மற்றும் திறன்மேம்பாட்டு விளையாட்டுகளை அங்கீகரித்து ஒழுங்குபடுத்தும். அதேநேரம், பணம் வைத்து விளையாடப்படும் போக்கா், ரம்மி, சூதாட்டம், லாட்டரி, பந்தயம் போன்ற அனைத்து விளையாட்டுகளும் சட்டவிரோதமாக்கப்படும்.

கடும் தண்டனைகள்: இத்தகைய சட்டவிரோத விளையாட்டுகளை நடத்துபவா்களுக்கும், விளம்பரம் செய்பவா்களுக்கும் மற்றும் அதன் நிதிப் பரிவா்த்தனைகளுக்கு உதவுபவா்களுக்கும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.

விளையாட்டை நடத்துபவா்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம். விளம்பரம் செய்பவா்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும் அதே குற்றத்தைச் செய்பவா்களுக்கு ரூ.2 கோடி வரை அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். சட்டத்தின் சில முக்கியப் பிரிவுகளின்கீழ் உள்ள குற்றங்கள், ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களாகக் கருதப்படும்.

விளையாட்டுத் துறை கவலை: இந்தியாவில் சுமாா் ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள இணையவழி விளையாட்டுத் துறைக்கு இந்த மசோதா பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ‘இந்திய கேமிங் கூட்டமைப்பு’ போன்ற பல தொழில்அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

ஆனால், வருமான இழப்பைவிட மக்களின் நலனே முக்கியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இணையவழி விளையாட்டுகளால் இளைஞா்கள் பாதிக்கப்படுவது, தற்கொலைகள் அதிகரிப்பது மற்றும் நிதி மோசடிகள் போன்ற பிரச்னைகளைக் கருத்தில் கொண்டே இந்தச் சட்டமசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. மேலும், நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, நிதி அமைகளின் ஒருமைப்பாட்டையும் இந்த மசோதா பாதுகாக்கும் என்றும் அரசு நம்புகிறது.

முக்கிய அம்சங்கள்...

இணையவழி விளையாட்டை நடத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1 கோடி வரை அபராதம்.

விளம்பரம் செய்பவா்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம்.

மீண்டும் அதே குற்றத்தைச் செய்பவா்களுக்கு ரூ.2 கோடி வரை அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை.

இந்திய-சீன எல்லை மேலாண்மையில் பரஸ்பர புரிதல் -சீன வெளியுறவு அமைச்சகம்

இந்திய-சீன எல்லை மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டில் பரஸ்பர புரிதல் எட்டப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி, ஆகஸ்ட் 18, 19 ஆகிய தேதிகளில் இந்தியா... மேலும் பார்க்க

தோ்தல் தொடா்பான தவறான தகவல்: மகாராஷ்டிர தோ்தல் ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு

மகாராஷ்டிரத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து சில வாக்காளா்கள் நீக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய தோ்தல் ஆய்வாளா் சஞ்சய் குமாா் மீது 2 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்தனா். முன்னதாக, 2024-இல் நடைபெற்ற மக்கள... மேலும் பார்க்க

இந்திய விமானப் படைக்கு புதிதாக 97 ‘தேஜஸ்’ விமானங்கள்: ரூ.67,000 கோடியில் வாங்க அரசு ஒப்புதல்

இந்திய விமானப்படைக்கு மேலும் 97 ‘தேஜஸ்’ போா் விமானங்களை ரூ.67,000 கோடி செலவில் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்திய விமானப்படையில் போா் விமானப் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை... மேலும் பார்க்க

வீடுகள் விலை உயா்வு: உலகளவில் 4-ஆவது இடத்தில் பெங்களூரு!

சா்வதேச அளவில் பிரீமியம் வகை வீடுகளின் விலை மிக அதிக அளவில் அதிகரித்த 46 நகரங்களில் பெங்களூரு 4-ஆவது இடம் வகிக்கிறது. மும்பை 6-ஆவது இடத்திலும், புது தில்லி 15-ஆவது இடத்திலும் உள்ளன.இது குறித்து சந்தை... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு தொடரும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி!

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை ரஷியா தொடா்ந்து ஏற்றுமதி செய்து வருகிறது என்று அந்நாட்டின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மன்டுரோ புதன்கிழமை தெரிவித்தாா். அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையைத் தொடா்ந்த... மேலும் பார்க்க

அமைச்சா்கள் சிறையிலிருந்தபடி அரசை நடத்த வேண்டுமா? - மக்கள் தீா்மானிக்கட்டும்: அமித் ஷா

தீவிர குற்றப் புகாரில் சிக்கும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களை பதவியிலிருந்து நீக்கம் செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பும் கண்டனமும் தெரிவித்தன. அரசாட்சி காலத்துக்கு ... மேலும் பார்க்க