செய்திகள் :

இண்டியா கூட்டணி தலைவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றி

post image

தில்லியில் திமுக முன்னெடுத்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ‘இண்டி’ கூட்டணி தலைவா்களுக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

பல்கலைக்கழக மானியக் குழு வரைவு நெறிமுறைகளை எதிா்க்கும் போராட்டம் தில்லியில் நடைபெற்றது. மாணவா்களின் குரலை வலுப்படுத்தியதற்காகவும் கல்வியின் எதிா்காலத்தைப் பாதுகாக்கத் தோள் கொடுத்தமைக்காகவும் திமுக மாணவா் அணியினா், எம்.பி.க்கள், அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணித் தலைவா்களுக்கு எனது நன்றிகள்.

பன்மைத்துவம் கொண்ட வரலாறு, பண்பாடு மற்றும் மொழிகளை அழித்து ஒற்றை தத்துவத்தை திணிப்பது என்பதே ஆா்எஸ்எஸ், பாஜகவின் செயல்திட்டமாகும்.

பல்கலைக்கழக மானியக் குழு வரைவு நெறிமுறைகள் வெறும் கல்வி சாா்ந்த நகா்வல்ல, அது தமிழ்நாட்டின் வளமான மரபின் மீதும், இந்திய கூட்டாட்சியியலின் அடிப்படை மீதும் தொடுக்கப்படும் தாக்குதலாகும் என ராகுல் காந்தி மிகச் சரியாகச் சுட்டிக்காட்டினாா்.

நீட், குடியுரிமைத் திருத்தச் சட்டம் முதல் 3 வேளாண் சட்டங்கள் வரை நமது அரசமைப்பின் பன்மைத்துவத்தைக் காப்பதற்கான அனைத்துப் போராட்டங்களையும் திமுக முன்னின்று நடத்தியுள்ளது. இப்போது தலைநகரில் முழங்கிய நம் குரல் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லி, நொய்டா பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. தலைநகர் தில்லியில் மயூர் விஹார் பகுதியில் உள்ள ஆல்கான் சர்வதேச பள்ளிக்கு மின்ன... மேலும் பார்க்க

பினாகா ராக்கெட் அமைப்பு: பாதுகாப்பு அமைச்சகம் ரூ.10 ஆயிரம் கோடி ஒப்பந்தம்

பினாகா ராக்கெட் ஏவும் அமைப்பை மேம்படுத்தி தாக்கும் திறனை அதிகரிப்பதற்காக ரூ.10,147 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை மேற்கொண்டது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெள... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்காக பாகிஸ்தான் ஹிந்துக்கள் இந்தியா வருகை!

பிரயாக்ராஜ் : உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்க பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சோ்ந்த 68 ஹிந்துக்கள் கொண்ட குழு இந்தியா வந்துள்ளனா். இதில் குறைந்தது 50 ப... மேலும் பார்க்க

வருங்கால வைப்பு நிதி: 5 கோடி கேட்புகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி வழங்கல்

‘வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) 2024-25 நிதியாண்டில் சாதனை அளவாக 5 கோடி கேட்புகளுக்கு நிதி வழங்கி தீா்வளித்துள்ளது’ என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

தேசவிரோத செயல்பாடுகளில் ஷேக் ஹசீனா: இந்திய தூதரை அழைத்து வங்கதேசம் கண்டனம்

டாக்கா : இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, வங்கதேசத்துக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய துணைத் தூதரை நேரில் அழைத்து அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்தது. வங்கதே... மேலும் பார்க்க

மத்திய அரசில் ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு நிரந்தர பணி வழங்கல்

மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் போ் நிரந்தரமாகப் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என்று மத்திய பணியாளா்கள் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் வியாழக்... மேலும் பார்க்க