செய்திகள் :

``இது என்னைப் பாதிக்காது'' - காலணி வீசிய வழக்கறிஞரை தவிர்த்து, வழக்கை கவனித்த தலைமை நீதிபதி கவாய்

post image

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக கவாய் பதவி வகித்து வருகிறார். இன்று அவர் வழக்கு விசாரணை செய்துகொண்டிருக்கும்போது வழக்கறிஞர் ஒருவர் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை தாக்க முயன்றிருக்கிறார்.

அந்த வழக்கறிஞர் கவாய் இருக்கைக்கு அருகே சென்று காலணியை வீசி தாக்க முயன்றிருக்கிறார்.

பி.ஆர்.கவாய்
பி.ஆர்.கவாய்

பின்னர் அந்த வழக்கறிஞரை சுப்ரீம் கோர்ட்டில் இருந்த பாதுகாவலர்கள் வெளியேற்றி இருக்கிறார்கள்.

"சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது" என அந்த வழக்கறிஞர் கூச்சலிட்டிருக்கிறார்.

“கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது. அனைத்து மதங்களையும் மதிப்பவன் நான்" என்று எந்த பரபரப்பும் இல்லாமல் வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் தலைமை நீதிபதி கவாய்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்குகள்; விசாரனையின்போது நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

கரூரில் நடந்த த.வெ.க பரப்பரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் மரணமடைந்த சம்பவம் நாட்டையே கலங்க வைத்தது.இது சம்பந்தமாக சி.பி.ஐ விசாரணை கோரியும், த.வெ.க மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் 7 பொது நல... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் வழக்குகள்; விசாரணையைத் தொடங்கிய மதுரை உயர் நீதிமன்றம்

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரைக் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலர் காயமடைந்துள்ள நிலையில் பாதிக... மேலும் பார்க்க

`சீமான் - விஜயலட்சுமி பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும்' - உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்... மேலும் பார்க்க

``புல்டோசர் நடவடிக்கைக்கெதிராக நான் அளித்த தீர்ப்பு எனக்கு மன நிறைவானது'' - CJI பி.ஆர்.கவாய்

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 2017-ல் ஆரம்பித்த புல்டோசர் நடவடிக்கை மெல்ல மெல்ல மத்தியப்பிரதேசம், ஹரியானா என பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கும் பரவியது. பெண்களுக்கெதிரான குற்றங்களைச் செய்வோர், குற... மேலும் பார்க்க

அதானி நிறுவன வழக்கு: ஊடகங்களை வாயடைக்கச் சொல்லும் நீதிமன்றமும் அமைச்சகமும்! ஜனநாயகத்திற்கான சவாலா?

கார்ப்பரேட் கரங்கள் எதையும் வளைப்பதற்கு நீளக்கூடியவை – நீதியைக் கூட. இதற்கு ‘ஐ விட்னஸ்’ சாட்சியாகப் பல வழக்குகள், தீர்ப்புகள் இருக்கின்றன. தற்போது வந்துள்ள ஒரு நீதிமன்றத் தடையாணை, "இவ்வளவு அப்பட்டமாகவ... மேலும் பார்க்க

போலீஸ் விசாரணையின்போது CCTV கட்; AI மூலம் தீர்வு - உச்ச நீதிமன்றம் யோசனை!

காவல் நிலையங்களில் பயன்படாத CCTV கேமராக்களை கண்காணிப்பதற்காக முழுமையான தானியங்கி கட்டுப்பாட்டு அறைகளை அமைப்பது குறித்து பரிசீலித்துவருவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.நீதிபதிகள் விக்ரம் நாத் ம... மேலும் பார்க்க