தவெக மாநாடு: 100 டிகிரி வெயில்; டிரோன்கள் மூலம் குடிநீர் விநியோகம்!
`இது ஒரு போராடும் கலைஞனின் கதை!’ - விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் பட அப்டேட்!
சினிமாவில் எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்று எத்தனையோ பேர் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள். அவர்களில் ஒரு சிலரை, சினிமா தாய் சிம்மாசனத்தில் உட்காரவைத்து அழகு பார்க்கிறாள். சென்னையில் நடிப்பு கற்றுக் கொள்ள கூத்துப் பட்டறை என்கிற பயிற்சிக் கூடம் இருக்கிறது. இங்கே பலபேர் சொந்த பணம் கட்டி நடிப்பு பயிற்சி கற்று வருகின்றனர். வெள்ளித்திரையில் சில பேர் வெற்றி பெறுகிறார்கள், பல பேர் காணாமல் போய் விடுகிறார்கள்.

இப்போது `மக்கள் செல்வன்’ என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதியும் ஒரு காலத்தில் கூத்துப் பட்டறையில் சேர்ந்தார். நடிப்புக்காக அல்ல. பணிக்காக, அக்கவுண்டன்ட் வேலையில் சேர்ந்தார். அங்கே பயிற்சிக்கு வருபவர்கள் இரண்டு மணி நேரத்தில் நடிப்பு பயிற்சி முடிந்து கிளம்பி விடுவார்கள். சேதுபதியோ காலை வேலைக்கு வந்தது முதல், இரவு வீட்டுக்கு போகும்வரை ஒரு பக்கம் அலுவலக பணி. இன்னொரு பக்கம் அங்கே சொல்லித்தரும் நடிப்பின் ஒவ்வொரு பரிமாணத்தையும் கூர்மையாக கவனித்துக் கொண்டே இருந்தார்.
ஒரு கட்டத்தில் கூத்துப் பட்டறைக்கு குட்பை சொன்னார். சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு சான்ஸ் தேட ஆரம்பித்தார். முதலில் கும்பலோடு சேர்ந்து கோஷம் போடும் வேஷம் கிடைத்தது. அடுத்து தனுஷ், சசிகுமார் உடன் தலையைக் காட்டினார். அதன்பின்னர் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஒடிசலான உடம்போடு ஹீரோவாக முகம் காட்டினார். அப்புறம் சினிமாவில் நெகடிவ், பாசிட்டிவ் கேரக்டரில் நடிக்க வேண்டுமா? "கூப்பிடுங்கள் விஜய் சேதுபதியை " என்று கோடம்பாக்கமே கூறுகிற அளவுக்கு உயர்ந்து வளர்ந்தார் சேதுபதி.
ரஜினி, கமல் என்ற இரு துருவங்கள் கண்களை நேருக்கு நேர் பார்த்து நடுக்கம் இல்லாமல் நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார். கோலிவுட் தாண்டி பாலிவுட்டில் கால் பதித்து ஷாருக்கானுக்கே ஜர்க் கொடுத்தார்.

`சினிமாவில் ஜெயிக்க போராடும் ஒரு கலைஞன்!’
பாக்யராஜ் நடித்த தாவணி கனவுகள் படத்தில் சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்பு தேடி ஜெயித்து விடுவார். அதேபோல் ரஜினி சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு ராஜா சின்ன ரோஜா படத்தில் கடைசியில் வெற்றி பெறுவார். தற்போது விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வரும் அதே ஜானர் படம் திரைப்படம் தமிழ் & தெலுங்கு மொழியில் உருவாகி வருகிறது.
சினிமாவில் நடித்து உச்சத்தை தொட்டு ஜெயிக்க போராடும் ஒரு கலைஞன் கதையை தயாரித்து, இயக்கி வருகிறார், பூரி ஜெகன்நாத். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி தன்னுடைய நிஜ வாழ்க்கையில் சினிமாவில் ஜெயிப்பதற்காக போராடியதையும் அப்போது ஏற்பட்ட அவமானங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி அற்புதமாக நடித்து வருகிறாராம்.
இதுவரை பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு இரண்டு செட்யூலை எடுத்து முடித்து இருக்கிறார்கள். இறுதிக் காட்சியில் விஜய் சேதுபதி எப்படி வெல்கிறார் என்பதுதான் கிளைமாக்ஸ் காட்சியில் பூரி ஜெகன்னாத் வைத்து இருக்கும் சோலாபூரி ட்விஸ்ட்!.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...