லடாக் வன்முறை! போராட்டத்தைத் தூண்டியதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது!
``இதைச் செய்தால்தான் திரைத் துறையினர் ஓட்டு போடுவார்கள்" - ஆர்.வி.உதயகுமார்
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் சைக்கோ த்ரில்லர் திரைப்படம் 'இரவின் விழிகள்'.
தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார்.
கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே 'இரவின் விழிகள்' படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இசை வெளியீட்டு விழாவில் பேசிய போஸ் ஆர்.வி.உதயகுமார், " நான் இயக்கிய 'பொன்னுமணி' திரைப்படம் வந்த காலகட்டத்தில் சினிமா ஆரோக்கியமாக இருந்தது.
உதாரணத்திற்கு ஒரு வாரத்திற்கு 16 படங்கள் வெளியாகின என்றால் அதில் 12 திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக இருந்தன. தயாரிப்பாளர்களும் செழிப்பாக இருந்தார்கள்.
ஆனால், தற்போது அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மீண்டும் அந்த நிலை வரவேண்டும். இயக்குநர் சங்கத் தலைவர் என்கிற முறையில் இதை நான் கூறுகிறேன்.

ஒரு வாரத்திற்கு இத்தனை திரைப்படங்கள் தான் வெளிவர வேண்டும் என்கிற வரையறையை உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கித் தருபவர்களுக்கு திரைத்துறையினர் ஓட்டு போடுவார்கள்.
உலக அரங்கில் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்கள் சிறந்து விளங்குகின்றன. ஆனால் தமிழ்த் திரைப்படங்கள் இருப்பதே தெரியவில்லை. இந்த நிலைமை மாற வேண்டும்.
ரசிகர்கள் ஸ்டார்களின் திரைப்படங்கள் மற்றும் அதிக பட்ஜெட் திரைப்படங்களுக்கு 1500 ரூபாய் கொடுத்து டிக்கெட் பெற்று படம் பார்ப்பதை விடுத்து சிறிய படங்களுக்கு 100 ரூபாய் கொடுத்து டிக்கெட் பெற்று படம் பார்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று பேசியிருக்கிறார்.