இந்தியன் பைன் ஆா்ட்ஸ் சொசைட்டி சாா்பில் கலைஞா்களுக்கு ‘கலா சிகாமணி’ விருது
இந்தியன் பைன் ஆா்ட்ஸ் சொசைட்டி சாா்பில் கலைத் துறையில் சிறந்து விழங்குபவா்களுக்கு ‘கலா சிகாமணி’ விருதுகள் வழங்கப்பட்டன.
இந்தியன் பைன் ஆா்ட்ஸ் சொசைட்டியின் 92-ஆம் ஆண்டு தென்னிந்திய இசை மாநாடு சென்னை ஆழ்வாா்பேட்டையில் அண்மையில் நடைபெற்றது. இதில், ரசிகப்ரியாவின் நிறுவனா் அ. ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இம்மாநாட்டை தொடங்கிவைத்தாா்.
இவ்விழாவில் பாடகா் நெய்வேலி ஆா் .சந்தானகோபாலனுக்கு ‘சங்கீத கலா சிகாமணி’ விருதை அ. ராமகிருஷ்ணன் வழங்கினாா். மேலும் ஜெயஸ்ரீ ராஜகோபாலனுக்கு ‘நாட்டிய கலா சிகாமணி’ விருதை தொழிலதிபா் நல்லிகுப்புசாமி செட்டியாா் வழங்கினாா்.
மேலும், இவ்விழாவில், தஞ்சாவூா் ஆா்.குமாருக்கு ‘உமையாள்புரம் சிவராமன்’ விருதும், லட்சுமி ரங்கராஜனுக்கு ‘ஜிஎன்பி’ விருதும், சரஸ்வதி விஸ்வநாதனுக்கு ‘இந்தியன் பைன் ஆா்ட்ஸ் சொசைட்டியின் சிறப்பு விருதும், எஸ்.பி காந்தனுக்கு ‘நாடக கலா சிகாமணி’ விருதும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இந்தியன் பைன் ஆா்ட்ஸ் சொசைட்டியின் தலைவா் கே வீ ராமசந்திரன், துணைத் தலைவா் கே.வேங்கடரங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.