செய்திகள் :

இந்தியாவின் பாதுகாப்பு அரண்...

post image

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக் -8, ஆகாஸ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 பேருக்கு நீதி வழங்கும் வகையில் கடந்த மே 7-ஆம் தேதி, பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி தகா்த்தது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் புதன், வியாழக்கிழமை இரவுகளில் மலிவான ட்ரோன்களை இந்திய எல்லைகளில் வீசி தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்தியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு சாதனங்கள் வானிலேயே இடைமறித்து அழித்தன.

ஜம்மு, உதம்பூா், சம்பா, அக்நூா், நாக்ரோடா, பதான்கோட் ஆகிய இடங்களில் இந்த வான் பாதுகாப்பு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. ட்ரோன்கள், ஹெலிகாப்டா்கள், ஏவுகணைகள், போா் விமானங்கள் ஆகியவற்றை வானிலேயே அழிக்கும் வகையில் ரேடாா் தொழில்நுட்பத்துடன் வான் பாதுகாப்பு சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் இயங்கும் இந்த தானியங்கி வான் பாதுகாப்பு சாதனங்களால் பெரும் உயிா், பொருள் சேதம் தடுக்கப்பட்டு வருகிறது.

எஸ்-400...

ரஷியாவிடமிருந்து வாங்கப்பட்ட எஸ்-400 என்ற வான் பாதுகாப்பு சாதனம் 380 கி.மீ. தொலைவு வரையில் சென்று வேகமாக வரும் எதிரி ஏவுகணைகளைத் துல்லியமாக தாக்கி தவிடுபொடியாக்கும் திறன் படைத்தது.

பராக்-8 எம்ஆா்-எஸ்ஏஎம்: இஸ்ரேல் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இந்த சாதனம் சுமாா் 70 கி.மீ. தொலைவு வரை சென்று எதிரி ஏவுகணையைத் தாக்கும் வல்லமை படைத்தது.

ஆகாஷ்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த சாதனம், சுமாா் 25 கி.மீ. தொலைவு வரை சென்று எதிரி ஏவுகணையைத் தாக்கி அழிக்கும். இவை எல்லையில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

ஸ்பைடா்: இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்ட இந்த சாதனம் 15 கி.மீ. தொலைவு வரையில் தாக்கக் கூடியதாகும்.

குறுகிய தொலைவு சாதனங்கள்:

ரஷியாவின் இக்லா-எஸ் (6.கி.மீ.)

இக்லா-1எம் (5 கி.மீ.)

ஓஎஸ்ஏ-ஏகே-எம் (10 கி.மீ.)

பெசோரா ஏவுகணைகள், எல்-70 துப்பாக்கிகள் (3.5. கி.மீ.)

பாகிஸ்தான் வான் பாதுகாப்பு சாதனம்...

ஹெச் க்யூ-9: சீனாவினிடம் இருந்து வாங்கப்பட்ட இந்த சாதனம் அதிகபட்சமாக 120 முதல் 300 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கி அழிக்கக் கூடியதாகும்.

ஸ்பாடா: பிரான்ஸிடம் இருந்து வாங்கப்பட்ட இந்த சாதனம் 20 முதல் 25 கி.மீ. தொலைவு வரையில் சென்று தாக்கவல்லது.

பயங்கரவாத முகாம்களை தரைமட்டமாக்கிய இந்தியா: புதிய விடியோ

புது தில்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய முப்படைகள் இணைந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடித் தாக்குதலை நடத்தியது.இந்த நிலையில் இந்தியா - பாகி... மேலும் பார்க்க

போர்ப் பதற்றம்: உயரதிகாரிகளின் விடுமுறையை ரத்து செய்தது ஒடிசா அரசு!

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் காரணமாக முக்கிய பணிகளில் இருக்கும் உயரதிகாரிகளின் விடுமுறையை ஒடிசா அரசு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொது நிர்வாகம், பொது குறை தீர்க்கும் துறை, வருவாய் கோட்ட ... மேலும் பார்க்க

ராணுவத்திற்கு உதவ சண்டீகரில் குவிந்த தன்னார்வலர்கள்!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கடுமையான தாக்குதல் நடைபெற்றுவரும் நிலையில், இந்திய ராணுவத்தின் சேர விருப்பம் தெரிவித்து பஞ்சாபின் சண்டீகரில் பெண்கள், இளைஞர் பலர் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறத... மேலும் பார்க்க

போர் விமானங்களைப் பயன்படுத்திய பாகிஸ்தான்: கர்னல் சோஃபியா குரேஷி

புது தில்லி: போர் விமானங்களையும் தாக்குதலுக்குப் பயன்படுத்தியது பாகிஸ்தான். ஆனால், பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் அளவோடு பதிலடி கொடுத்து வருகிறது என்று இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி விளக... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது! - விக்ரம் மிஸ்ரி

பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு ட்ரோன் தாக்குதல் நடத்தியது குறித்து மத்திய வெளியுறவு... மேலும் பார்க்க

இந்தியா Vs பாகிஸ்தான்: செய்திகள் நேரலை!

முந்தைய செய்திகள்படிக்க : ஆபரேஷன் சிந்தூர்: செய்திகள் - நேரலைசென்னை வந்தடைந்த மாணவர்கள்! பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி, பஞ்சாப... மேலும் பார்க்க