பெண் அதிகாரிகள் தலைமையில் செயல்படும் 43% காவல் நிலையங்கள்! - துணை முதல்வா் உதயநி...
``இந்தியாவில் செய்வதில் விருப்பம் இல்லை; அமெரிக்கா வாங்க'' - ஆப்பிள் நிறுவனத்து ட்ரம்ப் நெருக்கடி!
சீனாவில் இருக்கும் தொழிற்சாலைகளை கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டு வருகிறது ஆப்பிள் நிறுவனம்.
இனி ஆப்பிளின் அந்தத் தொழிற்சாலைகள் இந்தியாவில் தொடங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலைகளும் இங்கே தொடங்கிவிட்டன.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார். அதாவது ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தொழிற்சாலைகளை கட்டமைப்பது குறித்து பேசியதாக நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

ட்ரம்ப் பேசியது என்ன?
தோஹாவில் நடந்த பிசினஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், "நான் டிம் குக்கிடம், நண்பரே, நான் உங்களை நன்றாகத் தான் நடத்துகிறேன். நீங்கள் 500 பில்லியன் டாலர்களை கொண்டு வருகிறீர்கள். ஆனால், அதை இப்போது நீங்கள் இந்தியா முழுக்க கட்டமைக்க உள்ளீர்கள் என்று கேள்விபடுகிறேன்.
எனக்கு நீங்கள் அதை இந்தியாவில் கட்டமைக்க வேண்டாம். உங்களுக்கு இந்தியாவை கவனித்துகொள்ள வேண்டுமானால், நீங்கள் இந்தியாவில் கட்டமையுங்கள். காரணம், உலக அளவில் அதிக வரி போடும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதனால், இந்தியாவில் விற்பனை செய்வது கடினம்.
எந்த வரியும் போடமாட்டோம் என்கிற ஒப்பந்தத்தை இந்தியா நம்முடன் மேற்கொண்டுள்ளது. நாங்கள் உங்களை நன்றாகத் தான் நடத்துகிறோம் டிம், இவ்வளவு ஆண்டுகளாக நீங்கள் சீனாவில் தொழிற்சாலைகளை கட்டமைந்திருந்ததை பொறுத்துகொண்டோம். ஆனால், இப்போது நீங்கள் இந்தியாவில் கட்டமைப்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவில் அவர்களே அவர்களை கவனித்துகொள்வார்கள்" என்று கூறினார்.

இந்தியா அமெரிக்கா பொருட்கள் மீது எந்த வரியும் போடமாட்டோம் என்று கூறியுள்ளது என்று ட்ரம்ப் தான் கூறுகிறாரே தவிர, இந்தியா அதுகுறித்து எதுவும் இதுவரை பேசவில்லை.
ஆப்பிள் நிறுவனம் தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைக்க உள்ளது. அதனால், இந்திய பொருளாதாரம் உயரும்... இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்து கொண்டிருக்கும் வேலையில் ட்ரம்ப் இப்படி பேசியுள்ளது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.