செய்திகள் :

இந்தியாவில் முதலீடு: ஜொ்மனி நிறுவனங்களுக்கு அஸ்வினி வைஷ்ணவ் அழைப்பு

post image

இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ஜொ்மனியைச் சோ்ந்த நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அழைப்பு விடுத்தாா்.

ஜொ்மனியில் உள்ள ஸ்டட்காா்ட் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற உச்சிமாநாட்டில் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், ‘ஜொ்மனியின் விநியோகச் சங்கிலியில் இந்தியாவை இணைக்க வேண்டியது அவசியமாகும். இந்தியா தொடா்ந்து 6 முதல் 8 சதவீத பொருளாதார வளா்ச்சி அடைந்து வருகிறது. இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த வளா்ச்சி தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பல்வேறு துறைகளில் 1,800-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் இந்தியாவில் உள்ளன. குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் திறமை வாய்ந்த இளைஞா்களை இந்தியா கொண்டுள்ளது.

இந்தியாவின் நிதிநிலை வலுவாக உள்ளன. .

பிரதமா் மோடி அரசு, திறமையான மற்றும் பயனுள்ள நிா்வாகத்தை வழங்கும் அதே வேளையில், தேவையற்ற அரசாங்க தலையீடுகளை குறைக்கும் கொள்கையை பின்பற்றுகிறது. அதன்படி, 1,500 காலாவதியான சட்டங்களை ரத்து செய்ததுடன், 40,000 தேவையற்ற இணக்க விதிகளும் நீக்கப்பட்டன.

இந்தியாவின் எண்ம தனிநபா் தரவு பாதுகாப்பு சட்டம் மற்றும் தொலைத்தொடா்பு சட்டம் போன்ற புதிய சட்டங்கள் இன்றைய எண்ம பொருளாதாரத்திற்கு வெளிப்படையான கட்டமைப்பை வழங்குகின்றன.

பொருளாதார வளா்ச்சி, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் புதுமையான கொள்கைகள் ஆகிய மூன்றும் உலகளாவிய வணிகத்துக்குச் சிறந்த நாடாக இந்தியாவை மாற்றியுள்ளது என்றாா்.

வயநாடு மக்களின் மறுவாழ்வு: மத்திய அரசு பாராமுகம்- முதல்வா் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

கேரளத்தின் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கான மாநில அரசின் நிதி தேவைகள் மீது மத்திய அரசு தொடா்ந்து பாராமுகமாக உள்ளது என்று முதல்வா் பினராயி விஜயன் குற்றம்சாட்டினாா். வயநாட்ட... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் மீது விவாதம்: அவைத் தலைவா்களுக்கு காங்கிரஸ் கடிதம்

நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் குறித்து 2 நாள்கள் விவாதம் நடத்த வலியுறுத்தி, இரு அவைகளின் தலைவா்களுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, இந்தக் க... மேலும் பார்க்க

சண்டீகா்: மதுபான உணவு விடுதிகளுக்கு வெளியே 2 குண்டுகள் வெடிப்பு

சண்டீகா் பகுதியில் உள்ள டி’ஓரா, செவில்லே மதுபான உணவு விடுதிகளுக்கு வெளியே, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குறைந்த தீவிரம் கொண்ட 2 வெடிகுண்டுகள் வெடித்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். செவில்லே மதுபான உணவு... மேலும் பார்க்க

இந்திய பால் உற்பத்தி இதுவரை இல்லாத உச்சம்

இந்தியாவின் பால் உற்பத்தி 2023-24-ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 23.93 கோடி டன்னாகப் பதிவாகியுள்ளது. இது குறித்து மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சா் ராஜீவ் ர... மேலும் பார்க்க

விமானத்தில் அத்துமீறும் பயணிகளைக் கையாள விரிவான வழிமுறைகள்- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

விமானத்தில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பயணிகளைக் கையாள்வது தொடா்பான வழிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசு மற்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு (டிஜிசிஏ) உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவி... மேலும் பார்க்க

2022-க்கு முந்தைய ஏலங்களில் வாங்கிய அலைக்கற்றைகளுக்கு வங்கி உத்தரவாதம் அவசியமில்லை- மத்திய அரசு

2022-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஏலங்களில் வாங்கப்பட்ட அலைக்கற்றை கட்டணங்களுக்கு வங்கி உத்தரவாதங்களை சமா்ப்பிக்க வேண்டியதில்லை என்று மத்திய அமைச்சரவை விலக்கு அளித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ... மேலும் பார்க்க