செய்திகள் :

இந்தியாவில் 2% மக்கள் மட்டுமே திரையரங்குகளில் படம் பார்க்கிறார்கள்: ஆமீர் கான்

post image

இந்தியாவில் நடைபெறும் வேவ்ஸ் சந்திப்பில் நடிகர் ஆமிர் கான் திரையரங்குகளில் அதிகமாக முதலீட்டை அளிக்க வேண்டும் எனப் பேசியுள்ளார்.

60 வயதாகும் ஆமிர் கான் சினிமாவில் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்கிறார். சமீபத்தில் தனது புதிய காதலியை அறிமுகப்படுத்தினார்.

முதல்முறையாக உலக ஆடியோ விடியோ என்டர்டெயின்மென்ட் சந்திப்பு (வேவ்ஸ்) மும்பையில் நேற்று தொடங்கியது. இதை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் பங்கேற்று பேசினார். ஆமிர்கான் பேசியதாவது:

திரையரங்குகளில் முதலீடு தேவை

இந்தியாவில் வித்தியாசமான பல திரையரங்குகள் வேண்டும் என நம்புகிறேன். இந்தியாவின் சில மாவட்டங்களில் மிகப்பெரிய இடங்களில் ஒரு திரையரங்கம்கூட இல்லாமல் இருக்கின்றன.

கடந்த பத்தாண்டுகளில் என்னவெல்லாம் பிரச்னைகளை சந்தித்தோமோ அதெல்லாம் கூடுதல் திரைகளுக்காக மட்டுமே. என்னைப் பொறுத்தவரை நாம் அதில்தான் முதலீட்டைச் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் அதிகமான பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் அதிகமான திரைகள் இருக்கும்போதே அது உணரப்படும்.

திரையரங்கம் இல்லையென்றால் மக்களும் படத்தினை பாரக்க மாட்டார்கள்.

குறைவான திரைகள் கொண்ட இந்தியா

இந்தியாவின் மக்கள் தொகையைக் கணக்கிடும்போது மிகவும் குறைவான திரையரங்குகளே இருக்கின்றன.

இந்தியா முழுவதும் வெறும் 10,000 திரைகளை இருக்கின்றன. ஆனால், இந்தியாவை விட 3இல் 1 பங்கு மக்கள் தொகையுள்ள அமெரிக்காவில் 40,000 திரைகள் இருக்கின்றன. அவர்கள் நம்மைவிட முன்பாக இருக்கிறார்கள்.

சீனாவில் 90,000 திரைகள் இருக்கின்றன. இந்தியாவில் தற்போது இருக்கும் 10,000 திரைகளிலும் பாதி தென்னிந்தியாவில் இருக்கின்றன. ஹிந்தி படங்களுக்கென்று 5,000 திரைகள் மட்டுமே இருக்கின்றன.

இந்தியாவில் 2% மக்கள் மட்டுமே திரையரங்குகளில் படம் பார்க்கிறார்கள்

எவ்வளவு பெரிய பிளாக்பஸ்டர் படமானாலும் இந்தியாவில் குறைந்த அளவு மக்களே படம் பார்க்கிறார்கள்.

திரைப்படங்களை விரும்பி பார்க்கும் இந்திய இந்திய நாட்டின் மக்கள் தொகையில் 2 சதவிகிதம் பேர் மட்டுமே படங்களை திரையரங்குகளில் பார்க்கிறார்கள்.

மீதமுள்ள 98 சதவிகித மக்கள் எப்படி படம் பார்ப்பது? கொன்கன் போன்ற இடங்களில் திரையரங்குகளே இல்லையெனில் எப்படி பார்ப்பார்கள்? அது மிகவும் மோசமான சூழ்நிலை. அதனால், திரைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.

மகளின் குறுஞ்செய்தியால் நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தேன்: சூர்யா

நடிகர் சூர்யா தன் மகள் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்கள... மேலும் பார்க்க

துல்கர் சல்மானின் ‘ஐயம் கேம்’ படப்பிடிப்பு துவக்கம்!

துல்கர் சல்மான் நடிக்கும் ஐயம் கேம் படத்தின் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.‘ஆர்.டி.எக்ஸ்’ படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நாயகனாக துல்கர் ... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் விஜய் பட வசனங்களை வைத்தது ஏன்? இயக்குநர் பதில்!

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மே.1ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் விஜய் பட வசனங்கள் ரசிகர்களிடையே ஆதரவினைப் பெற்றுள்ளன. இந்தப் படத்தி... மேலும் பார்க்க

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஓடிடி வெளியீடு!

நடிகர் அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகரும் கார் ரேசருமான அஜித் குமார் நடிப்பில் உருவான ‘குட் பேட் அ... மேலும் பார்க்க

ரெட்ரோ விழாவில் அவதூறு பேச்சு? நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கம்!

‘ரெட்ரோ’ படவிழாவில் தான் பேசியது சர்ச்சையான நிலையில் அதுகுறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கமளித்துள்ளார். நடிகர் சூரியாவின் ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் விழா தெலங்கானாவின் ஹைதரபாதில் நடைபெற்றது. அந்த வ... மேலும் பார்க்க

திருப்பதி செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் கவனத்துக்கு!

மே மாதம் தொடங்கிவிட்டது. கோடை விடுமுறையும் தொடங்கியிருப்பதால், ஏராளமானோர் திருப்பதி திருமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய திட்டமிடுவார்கள்.இதன் காரணமாக, திருமலை திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்க... மேலும் பார்க்க