மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: என்சிஇஆா்டி கூட்டத்தில் தமிழக அரசு
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் விஜய் பட வசனங்களை வைத்தது ஏன்? இயக்குநர் பதில்!
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மே.1ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் விஜய் பட வசனங்கள் ரசிகர்களிடையே ஆதரவினைப் பெற்றுள்ளன.
இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
நல்ல விமர்சனங்களைப் பெற்றுவரும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் படக்குழுவினர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் ரசிகர்களின் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் பேசியதாவது:
இந்தப் படத்தை வெற்றியடைய செய்த மக்களுக்கு எனது நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்.
குடும்பத்தினர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டால் படம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்ததால்தான் முதல்படமாக குடும்பப் படத்தை இயக்கினேன்.
இந்தத் திரைப்படத்தில் வரும் சிறுவனின் கதாபாத்திரம் ஒரு விஜய் ரசிகராக வடிவமைத்திருக்கிறேன்.
விஜய் தற்போது அரசியலுக்கு சென்றுவிட்டதால் அவரைக் குறித்த விஷயங்களை படத்தில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து சிறுவனின் கதாபாத்திரத்தை அவ்வாறு வடிவமைத்ததாகக் கூறினார்.