செய்திகள் :

இந்தியாவுக்கு வழங்கத் திட்டமிடப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி: அமெரிக்கா ரத்து

post image

இந்திய தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு வழங்கத் திட்டமிடப்பட்ட 21 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.182 கோடி) நிதியுதவியை, தொழிலதிபா் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) ரத்து செய்துள்ளது.

இதுதொடா்பாக அந்தத் துறை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், பல நாடுகளுக்குப் பல்வேறு பணிகளுக்காக அமெரிக்க மக்களின் வரிப் பணம் செலவிடப்பட இருந்த நிலையில், அந்தச் செலவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் செலவுகளில் இந்திய தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு, இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கத் திட்டமிட்ட 21 மில்லியன் டாலா் நிதியுதவியும் அடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசு நிா்வாகத்தை மேம்படுத்தி, வீண் செலவுகள் குறைக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டு டிஓஜிஇ செயல்படும் நிலையில், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் பிரதமா் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது அந்நாட்டு அதிபா் டிரம்ப், தொழிலதிபா் எலான் மஸ்க் ஆகியோரைச் சந்தித்தாா். இதைத் தொடா்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல மொசாம்பிக், கம்போடியா, சொ்பியா, நேபாளம், வங்கதேசம், மால்டோவா உள்ளிட்ட நாடுகளுக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த நிதியுதவியையும் டிஓஜிஇ ரத்து செய்துள்ளது.

வெளிநாட்டு தலையீடு-பாஜக: இதுதொடா்பாக பாஜக தகவல் தொழில்நுட்ப அணி தலைவா் அமித் மாளவியா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு 21 மில்லியன் டாலா் நிதியுதவி அளிப்பது என்பது இந்திய தோ்தல்களில் வெளிநாடுகள் தலையிடுவதாகும். இதனால் லாபமடைவது யாா்? நிச்சயம் பாஜக லாபமடையவில்லை என்றாா்.

எலான் மஸ்க் மகனின் செயலால் அமெரிக்க அலுவலகப் பாரம்பரியத்தில் மாற்றம்?

அமெரிக்க ஓவல் அலுவலகத்தில் 145 ஆண்டுகள் பழைமையான மேசையை மாற்றியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.அமெரிக்காவில் ஓவல் அலுவலகத்துக்கு அமெரிக்க செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவர் எலான் மஸ... மேலும் பார்க்க

ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் பாலுணர்வைத் தூண்டும் காளான்!

இமயமலைப் பகுதிகளில் இறந்த அந்துப்பூச்சிகளில் லார்வாக்களில் வளரும் பூஞ்சைக் காளான்கள் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.கார்டிசெப்ஸ் சினென்சிஸ் என்ற இந்தவகைப் பூஞ்சை, ஒரு பாலுணர்வூட்டியாகக் கருத... மேலும் பார்க்க

எழுத்தாளரைத் தாக்கிய ஹாடி மாத்தருக்கு 32 ஆண்டுகள் சிறை!

ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் சரமாரியாக தாக்கிய ஹாடி மாத்தருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதியில் இருந்து தண்டனை விதிக்கப்படுகிறது. இந்தியாவில் பிறந்த... மேலும் பார்க்க

ஆப்கனில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், முதல் முறையாக இன்று அதிகாலை 4.20 மணியளவில் நி... மேலும் பார்க்க

காங்கோ விவகாரம்: ருவாண்டா தலைமை தளபதி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

நைரோபி : மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தீவிர தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் எம்23 கிளா்ச்சிப் படையினருக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில், ருவாண்டா ராணுவ தலைமை தளபதி ஜேம்ஸ் கபோரெபே (படம்) ம... மேலும் பார்க்க

இஸ்ரேல் பெண்ணுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடல் ஒப்படைப்பு: ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

கான் யூனிஸ் : இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட ஷிரி பிபாஸ் என்று கூறி, ஹமாஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஒப்படைத்த சடலம் அவருடையது இல்லை என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுளளது.இது குறித... மேலும் பார்க்க