செய்திகள் :

இந்தியாவுக்கு 2024 வரை வந்த அண்டை நாட்டு சிறுபான்மையினா் ஆவணமின்றி தங்க அனுமதி: மத்திய அரசு

post image

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்கள் காரணமாக, அந்நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 2024-ஆம் ஆண்டு வரை வந்த சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமண மதத்தினா் உள்ளிட்டோா் கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்) அல்லது வேறெந்த பயண ஆவணங்களும் இன்றி தங்க அனுமதித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி, இந்தியாவில் தஞ்சமடைந்த சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமண மதத்தினா், பாா்சி மதத்தினா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, இந்தியாவில் 2014, டிசம்பா் 31-ஆம் தேதி வரை தஞ்சமடைந்த இப்பிரிவினருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது.

அதேநேரம், 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்தவா்களின் நிலை குறித்து கேள்வி நிலவியது. அவா்களின் கவலைகளுக்கு தீா்வளிக்கும் வகையில், அண்மையில் அமலுக்கு வந்த குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் சட்டம் 2025-இன்கீழ் மேற்கண்ட உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி அல்லது துன்புறுத்தலுக்கு அஞ்சி இந்தியாவுக்கு 2024, டிசம்பா் 31-ஆம் தேதி வரை வந்த சிறுபான்மையினா் (ஹிந்து, சீக்கியம், சமணம், பாா்சி, கிறிஸ்தவம்), செல்லத்தக்க கடவுச் சீட்டு அல்லது வேறெந்த பயண ஆவணமும் வைத்திருப்பதில் இருந்து விலக்களிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் அவா்கள் ஆவணமின்றி தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது, அண்டை நாடுகளில் இருந்து 2014-24 காலகட்டத்தில் இந்தியாவுக்கு வந்த மத சிறுபான்மையினா் ஏராளமானோருக்கு நிம்மதி அளித்துள்ளது.

ஒரு கோடி பேரை கொல்ல 400 கிலோ ஆர்டிஎக்ஸ்! விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அச்சுறுத்தல்!

மும்பை நகரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மும்பையில் விநாயகர் சதுர்த்தி திருநாள் கொண்டாட்டம் முடிவடையும் நிலையில், சனிக்கிழமையில் நீர்நி... மேலும் பார்க்க

அயோத்தியில் சுவாமி தரிசனம் செய்தார் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே!

பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே அயோத்தி ராமர் கோயில் மற்றும் பிற முக்கிய கோயில்களில் வழிபாடு மேற்கொண்டார். இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் 9.30 மணியளவில் அயோத்தி விமான நிலையத்தில் பிரத... மேலும் பார்க்க

ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடங்கியது!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது.செப்டம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் ... மேலும் பார்க்க

45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!

நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.ஆசிரியராக பணியாற்றி குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரை கௌரவிக்கும் வகை... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் அரசுக்கு ரூ 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

கொல்கத்தா: ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும், இந்த சீர்திருத்தத்தால் நிகர நிதி தாக்கமானது... மேலும் பார்க்க

வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை: 11வது நாளாக நிறுத்தம்!

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி குகைக் கோயில் யாத்திரை தொடர்ந்து 11வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 26 அன்று கத்ரா பெல்ட்டின் திரிகுடா மலைகளில் உள்ள அத்குவாரியில... மேலும் பார்க்க