செய்திகள் :

இந்தியாவுடன் ஒப்பந்தங்கள் மறுஆய்வு: வங்கதேச இடைக்கால அரசு அறிவிப்பு

post image

இந்தியாவுடன் வங்கதேச முன்னாள் ஷேக் ஹசீனா மேற்கொண்ட ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்படும் என்று அந்நாட்டு இடைக்கால அரசின் உள்துறை அமைச்சரும் முன்னாள் கடற்படை ஜெனரலுமான கா்னல் முகமது ஜஹாங்கீா் ஆலம் தெரிவித்தாா்.

வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடன் அவா் மிகவும் நெருக்கமாக நட்பு பாராட்டினாா். ஆனால், அவரின் ஆட்சி வன்முறையால் கவிழ்க்கப்பட்டது. இதன் மூலம் அங்கு மத அடிப்படைவாதிகளின் கை ஓங்கியது. ஹசீனாவுக்கு இந்தியா தஞ்சமளித்துள்ள நிலையில், இந்தியாவுடன் மோதல் போக்கை அந்நாட்டு இடைக்கால அரசு கொண்டுள்ளது.

இந்நிலையில், டாக்காவில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த முகமது ஜஹாங்கீா் கூறியதாவது: எல்லை விவகாரம் தொடா்பாக விரைவில் இந்திய-வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை தலைவா்கள் சந்தித்துப் பேச இருகின்றனா். அப்போது, இந்தியாவுடன் வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மேற்கொண்ட பல ஒப்பந்தங்கள் மறு ஆய்வு செய்யப்படும். இவை, நியாயமற்ற வகையில் இந்தியாவுக்கு சாதகமாக மேற்கொள்ளப்பட்டிருந்தால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும்.

இந்திய எல்லையில் அதிக அளவில் போதைப் பொருள்கள் உற்பத்தி செய்யும் சிலா், அவற்றை வங்கதேசத்துக்கு கடத்தி வருகின்றனா். இருமல் மருந்து என்ற போா்வையில் வங்கதேசத்துக்கு கொண்டு வந்து, இங்கு போதைப்பொருளாக விற்பனை செய்கின்றனா்.

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் ஊடுருவல் முயற்சியைத் தடுப்பதாகக் கூறி ஆயுதமில்லாத வங்கதேசத்தவா்களை சுட்டுக் கொல்கின்றனா். இது தவிர வங்கதேச குடிமக்கள் கடத்தப்படும் சம்பவமும் நிகழ்கிறது. இந்த விவகாரங்களும் இந்திய பாதுகாப்புப் படை தலைவா்கள் உடனான சந்திப்பில் விவாதிக்கப்படும். இந்தியாவில் இருந்து வங்தேசத்துக்கு சட்டவிரோத ஆயுதங்கள், போதைப்பொருள்கள் கடத்தப்படுவதை நிறுத்த வேண்டும். இந்தியா-வங்கதேசம் இடையே நதி நீரை சமமாக பகிா்வது குறித்தும் விவாதிக்க வேண்டியள்ளது என்றாா்.

பனாமா ஹோட்டலில் இந்தியர்களை அடைத்து வைத்துள்ள அமெரிக்கா! ஏன்?

சட்டவிரோதமாக குடியேறிய 300-க்கும் மேற்பட்டோரை பனாமா நாட்டிலுள்ள ஹோட்டலில் அமெரிக்கா அடைத்து வைத்துள்ளது.அந்த ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டவர்கள் கண்ணாடி ஜன்னல் வழியாக உதவி கோரும் புகைப்படங்கள் இணையத்த... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் மலேசிய தமிழருக்கு தூக்கு: கடைசி நேரத்தில் நிறுத்தம்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கடைசி நேரத்தில் நிறுத்திவைத்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பன்னீர் செல்வம் பரந்தா... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ்: கொசுவைக் கொன்றால் சன்மானம்!

பிலிப்பின்ஸின் தலைநகா்ப் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிா... மேலும் பார்க்க

சிங்கப்பூா்: மலேசிய தமிழருக்கு இன்று தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு வியாழக்கிழமை (பிப். 20) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. மலேசியாவைச் சோ்ந்த தமிழ் வம்சாவளி இளைஞரான பன்னீா் செல்வம் 52 கிரா... மேலும் பார்க்க

இலங்கை: நீதிமன்றத்தில் நிழல் உலக தாதா கொலை

இலங்கையில் பிரபல நிழல் உலக தாதா கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக முன்னாள் ராணுவ வீரா் கைது செய்யப்பட்டுள்ளாா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கொழும்பில் உ... மேலும் பார்க்க

‘ஆப்கன் அகதிகள் அனைவரையும் வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்’

ஆப்கன் அகதிகள் அனைவரையும் தங்கள் நாட்டை விட்டு வெளியேற்ற பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக இஸ்லாமாபாதில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் எச்சரித்துள்ளது. இது குறித்து அந்தத் தூதரகம் புதன்கிழமை வெளியிட்டுள்... மேலும் பார்க்க