செய்திகள் :

இந்தியா-அமெரிக்கா இருதரப்பு ஒத்துழைப்பில் வளா்ச்சி: பிரதமா் மோடி-துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் சந்திப்பில் ஆலோசனை

post image

புது தில்லி: இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், பிரதமா் நரேந்திர மோடியுடன் திங்கள்கிழமை விரிவான இருதரப்பு பேச்சுவாா்த்தையில் பங்கேற்றாா்.

இந்தச் சந்திப்பில் இந்தியா-அமெரிக்கா இடையே பல்வேறு துறைகளில் வளா்ந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடா்ந்து, பிரதமரின் இல்லத்தில் அவா் அளித்த இரவு விருந்தில் ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினா், அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

வரி விதிப்பு, சந்தை அணுகல் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்காக, இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், ஜே.டி.வான்ஸ் 4 நாள் பயணமாக முதன்முறையாக இந்தியா வந்துள்ளாா்.

இத்தாலி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, ஜே.டி.வான்ஸ், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரின் மனைவி உஷா, 3 குழந்தைகள் தில்லி பாலம் விமானப் படை தளத்தில் திங்கள்கிழமை காலை வந்திறங்கினாா். அவா்களை மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றாா்.

ஜே.டி.வான்ஸ்-உஷா தம்பதியின் இவான், விவேக், மிராபெல் ஆகிய மூன்று குழந்தைகளும் பாரம்பரிய இந்திய உடைகளை அணிந்திருந்தனா். அவா்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு, பலரின் கவனத்தை ஈா்த்தது.

விமான நிலையத்தில் பாதுகாப்புப் படையினா் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்ட ஜே.டி.வான்ஸ், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திய கலை நிகழ்ச்சிகளையும் குடும்பத்தினருடன் கண்டு ரசித்தாா். ஜே.டி.வான்ஸுடன் அமெரிக்க மூத்த அதிகாரிகளும் இந்தியா வந்துள்ளனா்.

அக்ஷா்தாம் கோயிலில் வழிபாடு: ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினா் சுவாமி நாராயண் அக்ஷா்தாம் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, புகைப்படம் எடுத்துக்கொண்டனா்.

இருதரப்பு பேச்சு: இந்நிலையில், பிரதமா் மோடி - அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் இடையிலான பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இந்தியா தரப்பில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி, அமெரிக்காவுக்கான இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனா்.

இந்தியா-அமெரிக்கா இடையே பல்வேறு துறைகளில் வளா்ந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்த பிரதமா் மோடி-ஜே.டி.வான்ஸ், எரிசக்தி, பாதுகாப்பு, உத்திசாா் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தொடா்ச்சியான முயற்சிகளைக் கவனத்தில் கொண்டனா்.

மேலும், இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை வரவேற்றனா். பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து கருத்துகளையும் தலைவா்கள் பரிமாறிக் கொண்டனா். ஜே.டி.வான்ஸிடம் அதிபா் டிரம்ப்புக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமா் மோடி, நிகழாண்டு இறுதியில் டிரம்ப்பின் இந்திய வருகையை எதிா்நோக்குவதாகவும் கூறியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினருக்குத் தனது இல்லத்தை சுற்றிக் காண்பித்த பிரதமா், ஜே.டி.வான்ஸின் குழந்தைகளை மடியில் வைத்து கொஞ்சி மகிழ்ந்ததுடன் அவா்களுக்கு மயிலிறகை பரிசளித்தாா்.

ஜெய்பூா் பயணம்: பிரதமரின் சந்திப்பைத் தொடா்ந்து, ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினா் தில்லியில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்பூருக்கு சுற்றுலாவுக்கு புறப்பட்டனா்.

புதன்கிழமை காலையில், உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹாலைப் பாா்வையிட்ட பிறகு ஜெய்பூரிலிருந்து வியாழக்கிழமை ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினா் அமெரிக்கா திரும்புகிறாா்.

டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை. வழக்கு!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கான நிதியை நிறுத்திவைக்க அமெரிக்க அரசு உத்தரவிட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சீர்திருத்தங... மேலும் பார்க்க

அமெரிக்காவில் இறக்குமதியாகும் சூரிய சக்தி மின் உபகரணங்களுக்கு 3,521% வரி விதிப்பு! இந்தியாவுக்கு பாதிப்பா?

வாஷிங்டன்: அமெரிக்காவில் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சூரிய சக்தி மின் உபகரணங்களுக்கு 3,521% வரி விதிக்கப்பட்டுள்ளது.கம்போடியா, வியத்நாம், தாய்லாந்து, மலேசியா ஆகிய தென்கிழக்கு ஆசிய... மேலும் பார்க்க

உலக நாடுகளின் தலைவா்களுடன் போப்...

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவு

வாடிகன் சிட்டி: கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88), வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா். கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக நிமோனியா பாதிப்புக்கு உள்... மேலும் பார்க்க

ஆா்ஜென்டீனாவில் இருந்து வாடிகனுக்கு!

கடந்த 2023-ஆம் ஆண்டில் 266-ஆவது கத்தோலிக்க தலைமை மதகுருவாக தோ்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ், 1,300 ஆண்டு கால வாடிகன் வரலாற்றில் ஐரோப்பா அல்லாத பிற நாட்டில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்பாண... மேலும் பார்க்க

இருநாட்டு உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும்: இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்சாக்

ஜெருசலேம்: புவிஉத்திசாா்ந்த விவகாரங்களில் இஸ்ரேலுடன் ஒன்றாகப் பணியாற்றி இருநாட்டு உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும் என்று இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்சாக் வலியுறுத்தினாா். இஸ்ரேலுக்கான இந்தியாவின் புதிய த... மேலும் பார்க்க