இந்தியா உடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்
இந்தியா உடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அமெரிக்காவிடம் இந்தியா அதிக வரி வசூலிப்பதாகவும், இதனால், இந்தியாவில் வணிகம் செய்ய முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது,
வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அமெரிக்காவிடம் அதிக வரி வசூலிக்கிறது இந்தியா.
பல ஆண்டுகளுக்கு முன்பே எங்களுக்கான வரியை இந்தியா குறைத்திருக்க வேண்டும்.
அமெரிக்காவிடம் அதிக பொருள்களை விற்கிறது இந்தியா. ஆனால், எங்களிடமிருந்து குறைவாகவே வாங்குகிறது. அதாவது, இந்தியாவுடன் குறைந்த அளவே வணிகம் செய்கிறோம். அதற்கு காரணம், இப்போது வரை இந்தியா எங்களிடம் அதிக வரியை வசூலிக்கிறது. இதனால், எங்கள் பொருள்களை இந்தியாவில் வணிகம் செய்ய முடியவில்லை. இது முழுவதும் ஒருதலைபட்சமான பேரழிவு எனப் பதிவிட்டுள்ளார்.