செய்திகள் :

சூடான் நிலச்சரிவில் புதைந்த கிராமம்! 1000 பேர் பலி!

post image

சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமமே மண்ணுக்குள் புதைந்த நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் திங்கள்கிழமை பலியாகியுள்ளனர்.

மேலும், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் பிழைத்துள்ளதாக சூடான் விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

சூடானில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் நிலையில், டார்பூர் பகுதியில் மர்ரா மலை அடிவாரத்தில் உள்ள தாராசின் என்ற கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்திருந்தனர்.

இந்த நிலையில், திங்கள்கிழமை பெய்த கனமழையில் ஏற்பட்ட நிலச்சரிவில் தாராசின் கிராமம் மண்ணுக்குள் புதைந்தது. இந்த கிராமத்தில் வசித்த ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியிருக்கக்கூடும் என்று சூடான் விடுதலை இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த கிராமத்தில் வசித்த ஒருவர் மட்டுமே தற்போது வரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், மண்ணுக்கு அடியில் புதைந்து கிடக்கும் சடலங்களை மீட்க ஐக்கிய நாடுகள் சபை உதவுமாறு சூடான் விடுதலை இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.

சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டுப் போரால் அந்நாட்டு மக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More than a thousand people were killed on Monday in a landslide in Sudan, with an entire village buried under the ground.

இதையும் படிக்க : அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் விலகலா? செப். 5 முடிவு அறிவிப்பு!

பாகிஸ்தானில் வெள்ளத்தில் மூழ்கிய 3,100 கிராமங்கள்! 24 லட்சம் மக்கள் பாதிப்பு!

பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத மழையால், பஞ்சாபின் 3,100 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி, சுமார் 24 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பஞ்சாபில் பெய்த கனமழையாலும், அங்குள்ள முக்கிய... மேலும் பார்க்க

ஆப்கன் நிலநடுக்கம் வெளியுலகுக்குத் தெரிய தாமதம் ஆனது ஏன்?

தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு மாகாணங்களே முழுமையாக நாசமாகியிருக்கும் நிலையில், திங்கள்கிழமை காலைதான் அந்த செய்தி வெள... மேலும் பார்க்க

இந்தோனேசியா: இந்தியர் உள்பட 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்! தேடுதல் பணிகள் தீவிரம்!

இந்தோனேசியா நாட்டின் வனப்பகுதியில், இந்தியர் உள்பட 8 பயணிகளுடன் சென்று மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெற்கு கலிமண்டன் மாகாணத்தின், கொடாபாரு மாவட்டத்தில் உள்ள வி... மேலும் பார்க்க

ஆப்கன் நிலநடுக்கம்: 900 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது. 3000 பேர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் குனார், நாங்கர்ஹார் மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிலநடுக்... மேலும் பார்க்க

ஆப்கன் நிலநடுக்கம்: சிக்கியவர்களை தேடும் பணி தீவிரம்! உதவி கோரும் தலிபான் அரசு

ஆப்கானிஸ்தானில் நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தில், இடிபாடுகளில் யாரேனும் உயிருடன் சிக்கியிருக்கிறார்களா என்று தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவ வெளிநாடுகள் முன்வர வேண்டும் என்று தலிபா... மேலும் பார்க்க

மோடியும் ஷி ஜின்பிங்கும் மோசமான நடிகர்கள்..! அமெரிக்க நிதியமைச்சர் கடும் தாக்கு!

பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் மோசமான நடிகர்கள் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அம... மேலும் பார்க்க