செய்திகள் :

இந்தியா-சீனா இடையே மோதலை தூண்டும் மேற்கு நாடுகள்: ரஷியா குற்றச்சாட்டு!

post image

அண்டை நாடுகளான இந்தியா-சீனா இடையே மோதலைத் தூண்ட மேற்கு நாடுகள் முயற்சிப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டியது.

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘எல்லைகளற்ற கலாசார வளா்ச்சி’ என்ற தலைப்பிலான மாநாட்டில் பங்கேற்ற ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் இந்தக் கருத்தைத் தெரிவித்ததாக, அங்கிருந்து வெளியாகும் ‘டாஸ்’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:

உலகளாவிய தெற்குலகை மேலாதிக்கம் செலுத்த மேற்கத்திய நாடுகள் முயற்சிக்கின்றன. அதன் காரணமாகவே, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை ‘இந்திய - பசிபிக் பிராந்தியம்’ என மேற்கத்திய நாடுகள் அண்மைக் காலமாக அடிக்கடி குறிப்பிட்டு, தெளிவான சீன எதிா்ப்புக் கொள்கையை பரப்பி வருகின்றன. இந்தியா- சீனா இடையே எல்லை விவகார மோதலைத் தூண்டிவிடவும் முயற்சிக்கின்றன.

தெற்காசிய பிராந்தியத்தில் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்தோனேசியா, மலேசியா உள்பட 10 தெற்காசிய நாடுகளை உள்ளடக்கிய ‘ஆசியான்’ அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் மேற்கத்திய நாடுகள், ‘ஆசியான்’ அமைப்பை வலுவிழக்கச் செய்ய விரும்புகின்றன. அதற்காகவே, இந்த அமைப்பில் இருக்கும் நாடுகளிடையே வெளிப்படையாக மோதலைத் தூண்டுகின்றன என்று லாவ்ரோவ் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் தாயகத்தை விட்டு வெளியேறிய முன்னாள் அதிபர்! அங்கோலாவில் தஞ்சம்!

மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காபோன் நாட்டின் முன்னாள் அதிபர் தனது குடும்பத்துடன் அந்நாட்டை விட்டு வெளியேறி அங்கோலாவில் தஞ்சமடைந்துள்ளார்.காபோன் நாட்டின் முன்னாள் அதிபரான அலி போங்கோ ஒண்டிம்பாவின் ஆட்... மேலும் பார்க்க

அமைதி பேச்சுவார்த்தைக்குத் தயார்: பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுக்கு அழைப்பு!

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, அமைதி பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாக... மேலும் பார்க்க

மீண்டும் தலைத்தூக்கும் கரோனா? சிங்கப்பூர், ஹாங்காங்கில் அதிகரிக்கும் பாதிப்புகள்!

தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகின்றன.சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேலும், சீனா மற்றும் தாய்லாந்திலும் புதியதாக... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குல்: காஸாவில் 20 பேர் பலி! டிரம்ப் பயணம் மாற்றத்தை ஏற்படுத்துமா?

காஸா மீது இஸ்ரேல் இன்று (மே 16) நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் அரசுமுறைப் பயணத்தை முடித்துக்கொண்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவுக்குத் திரும்ப... மேலும் பார்க்க

மெக்ஸிகோ: சாலை விபத்தில் 21 போ் உயிரிழப்பு

மெக்ஸிகோவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் பியூப்லா மாகாணத்தைச் சோ்ந்த இரு முக்கிய நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி, எதிா்த் தடத்துக்கு மாறியபோ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் அணுக் கதிா்வீச்சு கசிவு இல்லை! சா்வதேச அணுசக்தி முகமை அறிவிப்பு!

பாகிஸ்தான் அணுசக்தி மையங்களில் எவ்வித அணு கதிா்வீச்சு கசிவும் ஏற்படவில்லை என்று சா்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது. அண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல்... மேலும் பார்க்க