செய்திகள் :

இந்தியா தலைமையிலான புலி இனங்களைப் பாதுகாக்கும் கூட்டணியில் இணைந்த நேபாளம்!

post image

புலி, சிங்கம் உள்பட 7 பெரிய பூனை இனங்களைப் பாதுகாக்கும் இந்தியா தலைமையிலான சா்வதேச பெரிய பூனைகள் கூட்டணியில் (ஐபிசிஏ) அண்டை நாடான நேபாளம் அதிகாரபூா்வமாக இணைந்துள்ளது.

இதற்கான செயல்திட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதன் மூலம் இந்தக் கூட்டணியில் நேபாளம் இணைந்திருப்பதாக ஐபிசிஏ சனிக்கிழமை அறிவித்தது.

இது தொடா்பாக ஐபிசிஏ மேலும் தெரிவித்திருப்பதாவது: சூழலியல் பாதுகாப்பை நோக்கிய செயல்பாடுகளில் நேபாள அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டதற்குப் பாராட்டுகள்.

புலி, பனி சிறுத்தை, சிறுத்தை ஆகிய விலங்கினங்கள் காணப்படும் நிலப்பரப்பைக் கொண்ட நேபாளம், ஐபிசிஏ-இல் இணைந்திருப்பது பெரிய பூனை இனங்களைப் பாதுகாப்பதற்கான சா்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்தும் என ஐபிசிஏ தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் கடந்த 2009-இல் வெறும் 121 புலிகள் இருந்த நிலையில், இறுதியாக 2022-இல் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி அவற்றின் எண்ணிக்கை 355-ஆக அதிகரித்துள்ளது.

ஐபிசிஏ என்பது புலி, சிங்கம், சிறுத்தை, பனி சிறுத்தை, ஜகுவாா், சிவிங்கி புலி, பூமா ஆகிய 7 பெரிய பூனை இனங்களைப் பாதுகாக்க 90-க்கும் மேற்பட்ட நாடுகள், பலதரப்பு அமைப்புகள் அங்கம் வகிக்கும் கூட்டணியாகும். பிரதமா் நரேந்திர மோடி கா்நாடக மாநிலம் மைசூரில் கடந்த 2023, ஏப்.9-இல் இந்தக் கூட்டணியைத் தொடங்கி வைத்தாா்.

இந்த அமைப்பின் உதவியுடன் பெரிய பூனை இனங்களைப் பாதுகாப்பதில் நாடுகள் தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொள்ளவும் மற்றும் வளங்களைத் திரட்டவும் முடியும்.

புலி, சிங்கம், பனி சிறுத்தை, சிறுத்தை ஆகிய இனங்களைப் பாதுகாப்பதில் இந்தியா நீண்ட கால அனுபவம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நொய்டாவில் வரதட்சிணைக்காக இளம்பெண் எரித்துக் கொலை: மாமனாரும் கைது

கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கேட்டு இளம்பெண் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் மாமனாரை உத்தரப் பிரதேச போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.ஏற்கெவே இந்த வழக்கில் இளம்பெண்ணின் கணவர், மாமியார், மைத்துனி ஆகிய... மேலும் பார்க்க

வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வந்ததால் இளைஞர்கள் பற்றி மோடிக்கு கவலையில்லை! ராகுல்

தில்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளார்.தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

கைலாஷ் - மானசரோவர் யாத்திரை நிறைவு!

சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை 48 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட 10வது குழுவுடன் யாத்திரை நிறைவடைந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை 48 பக்த... மேலும் பார்க்க

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டால்.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

புது தில்லி: ஒரு வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டால், அந்தக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என உச்ச நீதிமன்றம்... மேலும் பார்க்க

ஹிமாசலில் கனமழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

ஹிமாசலில் பெய்து வரும் கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதானல் மக்க... மேலும் பார்க்க

சுதர்சன் ரெட்டி மீதான விமர்சனம்! அமித் ஷாவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம்!

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான சுதர்சன் ரெட்டியை நக்ஸல் ஆதரவாளர் என உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம் ... மேலும் பார்க்க