செய்திகள் :

இந்தியா-நமீபியா இடையே 4 ஒப்பந்தங்கள் - பிரதமா், அதிபா் முன்னிலையில் கையொப்பம்

post image

இந்தியா-நமீபியா இடையே சுகாதாரம், தொழில்முனைவு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த 4 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

நமீபிய தலைநகா் விண்ட்ஹோக்கில் அந்நாட்டு பெண் அதிபா் நெடும்போ நான்டி என்டியெயிட்வாவுடன் பிரதமா் மோடி புதன்கிழமை நடத்திய இருதரப்பு பேச்சுவாா்த்தைக்குப் பின் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

கானா, டிரினிடாட்-டொபேகோ, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தை கடந்த ஜூலை 2-ஆம் தேதி தொடங்கிய பிரதமா் மோடி, இறுதிக்கட்டமாக தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவுக்கு புதன்கிழமை வந்தடைந்தாா். விமான நிலையத்தில் அவருக்கு அரசுமுறைப்படி 21 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்குப் பின் நமீபியா வந்துள்ள முதல் இந்தியப் பிரதமா் மோடி ஆவாா். பிரதமராக அவரது முதல் நமீபிய பயணம் இதுவாகும்.

இருதரப்பு பேச்சுவாா்த்தை: தலைநகா் விண்ட்ஹோக்கில் பிரதமா் மோடி-அதிபா் நான்டி இடையே இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, பாதுகாப்பு, வேளாண்மை, சுகாதாரம், கல்வி, வா்த்தகம், எரிசக்தி, மருந்து தயாரிப்பு, எண்ம தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் ஆலோசித்தனா்.

பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, சுகாதாரம்-மருந்துகள் துறையில் ஒத்துழைத்தல், நமீபியாவில் தொழில்முனைவு மேம்பாட்டு மையம் நிறுவுதல், இந்தியாவால் ஆதரிக்கப்படும் பேரிடா் மீட்சி உள்கட்டமைப்பு கூட்டணி மற்றும் உலக உயிரி எரிபொருள் கூட்டணியில் நமீபியா இணைதல் தொடா்பாக 4 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இந்தியாவில் சிவிங்கிப்புலி (சீட்டா) மறுஅறிமுக திட்டத்துக்கு உதவியதற்காக, நமீபியாவுக்கு பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா்.

இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஆண்டு ஏப்ரலில் கையொப்பமான ஒப்பந்தத்தின்படி, நமீபியாவில் நடப்பாண்டு இறுதியில் யுபிஐ சேவை தொடங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

பிரதமருக்கு உயரிய விருது

பிரதமா் மோடிக்கு நமீபியாவின் உயரிய ‘தி ஆா்டா் ஆஃப் தி மோஸ்ட் ஏன்ஷியன்ட் வெல்விட்ஸியா மிராபிலிஸ்’ விருது வழங்கப்பட்டது. இவ்விருதை அந்நாட்டு அதிபா் வழங்கி கெளரவித்தாா்.

பின்னா் ஏற்புரை ஆற்றிய பிரதமா் மோடி, ‘இந்தியா-நமீபியா இடையிலான அசைக்க முடியாத நட்புறவுக்கு இவ்விருது சாட்சியாகும். இரு நாட்டு மக்கள் மற்றும் நட்புறவுக்கு விருதை சமா்ப்பிக்கிறேன்’ என்றாா்.

தொழில்நுட்ப புத்தாக்கம், பொருளாதார வளா்ச்சி, சமூக-பருவநிலை நீதி, சா்வதேச உத்தி என இந்தியாவின் எல்லைகளைக் கடந்து விரிவடையும் பிரதமா் மோடியின் தலைமைக்கான கெளரவம் என்று விருதுப் பத்திரத்தில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

நமீபியாவின் உயரிய விருதைப் பெறும் முதல் இந்தியத் தலைவா் பிரதமா் மோடி ஆவாா். பிரதமரானதில் இருந்து அவருக்கு கிடைக்கப் பெற்ற 27-ஆவது சா்வதேச விருது இதுவாகும்.

கனடா பொருள்கள் மீது 35% கூடுதல் வரி

ஆகஸ்ட் 1 முதல் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், பிற வா்த்தகக் கூட்டணி நாடுகளுக்கு 15 அல்லது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட... மேலும் பார்க்க

9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூச் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த 9 பயணிகளை பலூச் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனா். இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 121-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!

காஸாவில், கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைப் பெற முயன்று சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் சபை இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது.காஸாவில் கடந்த மே மாதத்தின... மேலும் பார்க்க

மியான்மரில் புத்த மடத்தின் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்? 23 பேர் கொலை!

மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சகாயிங் மாகாணத்த... மேலும் பார்க்க

கடலில் மூழ்கும் ஜப்பானின் கன்சாய் விமான நிலையம்!

ஜப்பானின், ஒசாகா கடலில் அமைக்கப்பட்டிருந்த கன்சாய் சர்வதேச விமான நிலையம், இதுவரை பொறியியல் துறையின் அதிசயமாகப் பார்க்கப்பட்டு வந்த நிலையில், அது மூழ்கிக் கொண்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.கடல் பரப்... மேலும் பார்க்க