செய்திகள் :

இந்தியா - பாகிஸ்தான் உள்பட 7 போர்களை நிறுத்தினேன்; நான் தீர்க்காத ஒரே போர் இதுதான்! - டிரம்ப்

post image

இந்தியா - பாகிஸ்தான் உள்பட 7 போர்களை நிறுத்தியிருப்பதாகவும் ஆனால் ரஷியா - உக்ரைன் இடையேயான போரை மட்டும் இதுவரை தீர்க்க முடியவில்லை என்றும் அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை வர்த்தகப் பேச்சுவார்த்தையின் மூலமாக நிறுத்தியதாக அமெரிக்க அதிபர்டீ டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்தியாவில் எதிர்க்கட்சிகளும் இதுதொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் டிரம்ப் இதுபற்றி மீண்டும் பேசியுள்ளார்.

ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலில் டிரம்ப் பேசுகையில்,

உக்ரைன் - ரஷியா இடையேயான போரை நிறுத்துவது எளிதானது என்று நினைத்தேன். ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை. போரை நிறுத்த இரண்டு வழிகள் இருந்தன. புதின் அதனைச் செய்ய முயன்றபோது ஸெலன்ஸ்கி அதைச் செய்யவில்லை. அடுத்து ஸெலன்ஸ்கி செய்ய விரும்புகையில் புதின் செய்ய விரும்பவில்லை. போரை நிறுத்த நாம் மிகவும் வலுவாக கீழே இறங்கிவர வேண்டும்.

புதினுடன் எனக்கு நல்ல நட்புறவு இருந்தது. இந்த ஒரு போரை மட்டும் என்னால் நிறுத்த முடியவில்லை. ஆனால் இந்த போரை நிறுத்த தீவிரமாக இறங்க முடிவு செய்திருக்கிறேன்.

நான் இதுவரை 7 போர்களை நிறுத்தியிருக்கிறேன். இந்தியா - பாகிஸ்தான் உள்பட பல போர்களை நிறுத்தியிருக்கிறேன். சில போர்கள் தீர்க்க முடியாதவையாக இருந்தன. ஆனால், அதனை நான் நிறுத்தினேன். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். தீர்க்க முடியாத போரை எல்லாம் நிறுத்தினேன். ஆனால் உக்ரைன் - ரஷியா போரை மட்டும் இதுவரை நிறுத்த முடியவில்லை.

பல நாடுகளின் வரி விதிப்புகளின் மூலமாக நாங்கள் போரை நிறுத்தியிருக்கிறோம். எங்களைப் பயன்படுத்திக் கொண்ட பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வரி விதிப்பு எங்களுக்கு ஒரு பெரிய ஆயுதமாக இருந்தது. அதுமட்டுமன்றி நாட்டிற்க்கு கோடிக்கணக்கான வருவாயை கொண்டுவந்தது. வரி விதிப்பு தொடர்பாக எங்கள் மீதான ஒரு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அந்த வழக்கில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அது எங்களை ஒரு பணக்கார நாடாக மாற்றியுள்ளது" என்று பேசியுள்ளார்.

US president Trump says that he stopped so many wars including Pakistan and India

இதையும் படிக்க | இந்தியா மீதான வரி விதிப்பு மோதலை ஏற்படுத்துகிறது! - டிரம்ப்

அமெரிக்க ஹையர் சட்ட மசோதா: இந்திய ஐடி துறையை கலங்கச் செய்வது ஏன்?

அமெரிக்க அமைச்சரவை கொண்டு வந்திருக்கும் ஹையர் என்ற சட்ட மசோதா, நிறைவேற்றப்பட்டால், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் தங... மேலும் பார்க்க

இந்தியா மீதான வரி விதிப்பு மோதலை ஏற்படுத்துகிறது! - டிரம்ப்

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு இரு நாடுகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷியா - உக்ரைன் போ... மேலும் பார்க்க

உலக அழிவுக்கு ஒத்திகைப் பார்க்கப்படுகிறதா? கோர முகம் காட்டும் இயற்கை!

அண்மைக் காலமாக உலகம் முழுவதும், மழை, வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு என இயற்கை தன்னுடைய கோர முகத்தை அவ்வப்போது காட்டி வருகிறது.அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் நேரிட்ட நிலநடுக்கத்தில் இரண்டா... மேலும் பார்க்க

நேபாள சாலைகளில் ஜென் ஸி இளைஞர்கள்! இந்த முறை போராட அல்ல.. சுத்தப்படுத்த!

நேபாளத்தில், திங்கள்கிழமை தொடங்கி இரண்டு நாள்கள் போராட்டம், கலவரமாக மாறி தலைநகர் காத்மாண்டு புரட்டிப்போடப்பட்ட நிலையில், இளைஞர்கள் அதனை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் விடியோக்கள் வெளியாகியு... மேலும் பார்க்க

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக சனிக்கிழமை காலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனைத் தொடர்ந்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவின் ... மேலும் பார்க்க

ஆளத்தொடங்குகிறதா செய்யறிவு? அல்பேனியாவில் முதல் ஏஐ அமைச்சர் டெய்லா!

உலகிலேயே முதல் முறையாக, அல்பேனியா நாட்டில், செய்யறிவு பெண் அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். இவர், நாட்டில் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்கப் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மனிதனால் உருவாக்... மேலும் பார்க்க