செய்திகள் :

இந்திய அரசியலமைப்பு தினம்: இந்த நாள் ஏன் முக்கியமானது... வரலாறும், சிறப்புகளும்!

post image

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை சம்விதன் திவாஸ் அல்லது Constitution Day Of India என அழைக்கின்றனர்.

1949-ம் ஆண்டு நம் நாடு அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. இதனால் இந்த ஆண்டு (2024) நாம் 75-வது அரசியலமைப்பு தினத்தை சிறப்பிக்கிறோம்.

இந்திய மக்கள் அனைவரும் அரசியலமைப்பு என்ற குடையின் கீழ்தான் ஒருமைப்பட்டுள்ளோம். ஜனநாயகத்தின் அடித்தளமாக திகழும் அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டு மாதங்கள் கழித்து ஜனவரி 26-ம் தேதி (குடியரசுதினம் அன்று) அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியா இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசு நாடாக உருவானது.

Constitution of India

அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக 2015-ம் ஆண்டு முதல் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய மதிப்புகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

அரசியலமைப்பின் சிற்பி என்று போற்றப்படும் அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு தலைவரான டாக்டர் அம்பேத்கரின் நினைவுகளை வணங்கவும் இந்த நாள் நமக்கு வாய்ப்பளிக்கிறது.

அரசியலமைப்பின் உருவாக்கமும் முக்கியத்துவமும்

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கான நீதி, சமத்துவம் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஓர் அடித்தளம் தேவைப்பட்டது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளும்போது உருவாக்கப்பட்டிருந்த இந்திய அரசு சட்டம், 1935 அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு சட்டகமாக இருந்தது. ஆனால் இதியாவை இறையாண்மை கொண்ட குடியரசு நாடாக நிர்வகிக்க அது போதுமானதாக இல்லை.

1946 டிசம்பரில் கேபினட் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற தேர்தல்கள் மூலம் அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது. இதில் அம்பேத்கர், நேரு, வல்லபாய் படேல் ஆகிய முக்கிய தலைவர்களுடன் 389 பேர் இடம்பெற்றிருந்தனர்.

அம்பேத்கர்

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்த எண்ணிக்கை 299 ஆகக் குறைக்கப்பட்டது.  டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமைத்தாங்க டிசம்பர் 9, 1946ல் இந்த அவையின் முதல் கூட்டம் நடைபெற்றது.

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் வரைவு கமிட்டி அமைக்கப்பட்டு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.

11 அமர்வுகளில் அரசியலமைப்புச் சட்டம் விவாதிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாள்கள் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதும் பணிகள் நீண்டன.

இந்திய அரசியலமைப்பு

நவம்பர் 26, 1949 அன்று, அரசியலமைப்பு சபை அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. முதலில் 395 ஆர்டிகள்கள் 8 அட்டவணைகளுடன் (பின்னர் திருத்தப்பட்டது) உலகிலேயே நீண்ட அரசியலமைப்புச் சட்டமாக உருவானது இந்திய அரசியலமைப்புச் சட்டம்.

இது முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய, குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் அவர்களின் கடமைகளை வலியுறுத்தும் சாசனமாக உள்ளது. அரசியலமைப்பு குறித்த சான்றோரின் உரைகளை தெரிந்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இந்த நாளை சிறப்பிக்கலாம்.

``CA தேர்வின் தேதி மாற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால்'' - மத்திய அரசு குறித்து கனிமொழி

பொங்கல் தினத்தன்று (14.1.2025) CA தேர்வு வைக்கப்பட்டுள்ளதாக அட்டவணை வெளியாகியிருந்தது.இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி,... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பதவியை ராஜினாமா செய்த முதல்வர், துணை முதல்வர்கள்... அடுத்த முதல்வர் யார்..?

மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி யாருக்கு என்பதில் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. முதல்வர் ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: சிதறிய வாக்குகள்; சின்னம் குளறுபடி... சரத்பவார் படுதோல்விக்கு காரணம் என்ன?

அதிருப்தியில் சரத்பவார்..மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வெறும் 10 தொகுதியில் மட்டுமே வெற்ற... மேலும் பார்க்க

நாடு முழுவதும் பரவும் `மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் - தமிழ்நாடு மாடலின் வெற்றியா?

தமிழ்நாடு அரசு தொடங்கி வைத்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், அடுத்தடுத்து பல்வேறு மாநில அரசுகளாலும் வெவ்வேறு பெயர்களில் அறிமுகப் படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மா... மேலும் பார்க்க

``சினிமாவைத் தாண்டிய நெருக்கம்...'' - மண்புழு தாத்தா... விழாவில் நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி!

மண்புழு விஞ்ஞானி பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் எழுதிய, "மண்புழு தாத்தாவின் மண்நல புரட்சிப் பாதை" என்ற புத்தக வெளியீட்டு விழா, நேற்று (24/11/2024) செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகி... மேலும் பார்க்க