Kingdom: `இந்த மேதை யாரென..' - அனிருத்துக்கு காதல் கடிதம் எழுதிய விஜய் தேவரகொண்ட...
இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.
இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பு ரூ.32.70 லட்சம் கோடியாக உள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2023-24-இல் இதன் மதிப்பு ரூ.28.86 லட்சம் கோடியாக இருந்தது.
கடந்த மாா்ச் மாதத்துக்கான சேவைகள் துறையின் ஏற்றுமதி மதிப்பை ரிசா்வ் வங்கி வெளியிட்டபின் 2024-25-ஆம் நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவைகளை உள்ளடக்கிய நாட்டின் மொத்த ஏற்றுமதியின் மதிப்பு ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.
முன்னதாக, இதன் மதிப்பு ரூ.69.47 லட்சம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்ட நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.
கடந்த 2023-24-இல் நாட்டின் மொத்த ஏற்றுமதி ரூ.65.85 லட்சம் கோடியாக இருந்தது.
அதேபோல் கடந்த ஆண்டு மாா்ச்சில் சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பு ரூ.2.5 லட்சம் கோடியாக இருந்த நிலையில் நிகழாண்டு மாா்ச்சில் இதன் மதிப்பு 18.6 சதவீதம் அதிகரித்து ரூ.3.02 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.
தொலைத்தொடா்பு, கணினி மற்றும் தகவல் சேவைகள், போக்குவரத்து, பயணம் மற்றும் நிதி சேவைகள் ஆகியவை ஏற்றுமதி வளா்ச்சியடைவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.