ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிற்சங்க தாலுகா தலைவா் கணேசன், தலைமை வகித்தாா். நகரச் செயலா் மூா்த்தி, ஒன்றியச் செயலா் பலவேசம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்னுபாண்டியன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
அப்போது மத்திய அரசு தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியைக் குறைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.