செய்திகள் :

இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி விளம்பரதாரர் யார்? பிசிசிஐ துணைத் தலைவர் பேட்டி!

post image

பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா இன்னும் இரண்டு வாரங்களில் இந்திய கிரிக்கெட் அணிக்கான விளம்பரதாரரை முடிவு செய்யப்படுமென கூறியுள்ளார்.

ஆசிய கோப்பையில் இந்திய அணி விளம்பரதாரர் பெயர் இல்லாமலே விளையாடி வருகிறது.

மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டுக்கான தடைச் சட்டத்தைத் தொடர்ந்து சமீபத்தில் பிசிசிஐ உடனான ஒப்பந்தத்தில் இருந்து ட்ரீம் 11 வெளியேறியது. இதனால், ஆண்டுக்கு ரூ.358 கோடியை இதனால் பிசிசிஐ இழந்துள்ளது.

மது, சூதாட்டம், கிரிப்டோ கரன்சி முதலான விளம்பரதாரர் அல்லாத நிறுவனங்களை பிசிசிஐ எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பேசியதாவது:

டெண்டருக்கான அறிபிப்பு வெளியாகிவிட்டது. அதை வாங்க அதிகமான ஏலதாரர்களும் வருகிறார்கள். அது முடிவுக்கு வந்தபிறகு உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்.

இன்னும் 15-20 நாள்களில் இறுதி முடிவு எடுக்கப்படும். அதிகமான விளம்பரதாரர்கள் டெண்டரை கோரியுள்ளார்கள். குறிப்பிட்ட ஒருவர் பெயரைச் சொல்ல முடியாது என்றார்.

BCCI vice president Rajiv Shukla on Saturday said the new jersey sponsor of the Indian cricket team will be finalised in the next two to three weeks, with bids scheduled to close on September 16.

இலங்கை அணி ஆசிய கோப்பை நடப்பு சாம்பியனா? என்ன சொல்கிறார் சரித் அசலங்கா?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சாம்பியன் இலங்கை அணி என அந்த அணியின் கேப்டன் சரித் அசலங்கா கூறியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் இன்று (செப்டம்பர் 13) நடைபெறும் போட்டியில் இலங... மேலும் பார்க்க

விராட் கோலி ஓய்வு பெற்றிருக்கக் கூடாது: தலிபான் தலைவர்

இந்திய வீரர் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கக் கூடாதென தலிபான் தலைவர் பேசியது கவனம் ஈர்த்து வருகிறது. விராட் கோலி 50 வயதுவரை விளையாட வேண்டுமென்றும் அவர் பேசியது ரசிகர்கள் மத்த... மேலும் பார்க்க

ஆசிய கோப்பையை வெல்வதே முக்கிய இலக்கு, இந்தியாவை வெல்வது மட்டுமல்ல: பாக். வீரர்

இந்தியாவை வெல்வது மட்டும் தங்களது இலக்கு அல்ல எனவும், ஆசிய கோப்பையை வெல்வதுதான் தங்களது முக்கிய இலக்கு எனவும் பாகிஸ்தான் வீரர் தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான... மேலும் பார்க்க

டி20 கிரிக்கெட்டில் 300 ரன்கள்: வரலாறு படைத்த இங்கிலாந்து!

டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 300 ரன்களை கடந்து வரலாறு படைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டி20 போட்டியில் இந்த சாதனையை இங்கிலாந்து அணி நிகழ்த்தியது. இதன்மூலம் டி20 தொடர் 1-1 என ச... மேலும் பார்க்க

இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைய காரணம் இதுதான்; முன்னாள் கேப்டன் விளக்கம்!

இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியடைவதற்கான காரணம் குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லாட்டீஃப் பேசியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் தொடங்கியது. இந்த தொடர... மேலும் பார்க்க

ஜோ ரூட் சதமடிக்காவிட்டால் நிர்வாணமாக திடலை வலம் வருவேன்: மேத்யூ ஹைடன்

ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் சதமடிக்காவிட்டால் மெல்போர்ன் கிரிக்கெட் திடலை நிர்வாணமாக வலம் வருவேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இ... மேலும் பார்க்க