செய்திகள் :

இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனையுடன் ஜப்பான் தூதர் சந்திப்பு!

post image

இந்தியாவிற்கு வருகைத் தந்துள்ள ஜப்பான் நாட்டுத் தூதர் பிகார் மாநிலத்திலுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனையை நேரில் சந்தித்துள்ளார்.

இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள ஜப்பான் நாட்டுத் தூதர் கெய்ச்சி ஒனொ, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ராணுவத்தில் ஜான்சி ராணி படைப்பிரிவில் பணியாற்றிய வீராங்கனை ஆஷா சஹாய் சவுதரி (வயது 97) என்பவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதுகுறித்து, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜப்பான் தூதர் கெய்ச்சி ஓனொ, ஜப்பானில் பிறந்து நேதாஜியின் வழியில் இந்தியாவின் சுதந்திரத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஜான்சி ரானி படைப்பிரிவைச் சேர்ந்த திருமதி ஆஷா சஹாய் சவுதரியைச் சந்திக்கும் பாக்கியம் தனக்குக் கிடைத்தது எனக் கூறியுள்ளார்.

மேலும், அவரது தாய்நாட்டின் மீதான பக்தியை தான் மிகவும் பாராட்டுவதாகவும் அவர் மேலும் தொடர்ந்து ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துகிறேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 1928-ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் பிறந்த ஆஷாவின் தந்தை ஆனந்த் மோஹன் சஹாய், நேதாஜியின் தலைமையில் இயங்கிய ஆசாத் ஹிந்து எனும் நாடு கடத்தப்பட்ட அரசின் அமைச்சராக பணியாற்றினார்.

தனது 15 ஆம் வயதில் நேதாஜியைச் சந்தித்த ஆஷா 1945-ம் ஆண்டு அவரது ராணுவத்தின் ஜான்சி படைப்பிரிவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, பாங்காக் நகரத்தில் ராணுவப் பயிற்சி பெற்ற அவர் நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்தபோது சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், 1946-ம் ஆண்டு விடுதலையாகி அவர் தனது தந்தையிடம் சேர்க்கப்பட்டார்.

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாபாத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டட... மேலும் பார்க்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க