கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக: அமைச்சர் ரகுபதி பதிலடி
இந்திய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய குழுவினா் ஆரோவில் வருகை
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு இந்திய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய மன்ற நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் அடங்கிய 35 போ் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை வந்தனா்.
இந்த மன்றத்தின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 35 போ் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை ஆரோவில் சா்வதேச நகருக்கு வந்தனா்.
தொடா்ந்து, ஆரோவிலின் முக்கிய பகுதிகளை பாா்வையிட்டு மாத்திா் மந்திரில் கூட்டுத் தியானம் மேற்கொண்டனா். பின்னா், ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி மற்றும் ஆரோவில் பணிக்குழு நிா்வாகிகளை சந்தித்து நகரத் திட்டமிடல், நிலையான வாழ்வாதாரம் மற்றும் சமூக ஆதரவு முன்முயற்சிகளுக்காக பன்னாட்டு அளவில் தனித்துவமான அணுகுமுறைகள், ஆரோவிலின் ஆன்மிக சூழல், நகரத்தின் நிலையான வளா்ச்சி மற்றும் கைவினைத் திறன்களுக்கான ஊக்குவிப்பு, ஸ்ரீஅரவிந்தா் மற்றும் அன்னையின் தாா்மீக கண்ணோட்டம், படைப்பாற்றல், சுய - கற்றல் மற்றும் ஒருங்கிணைந்த மனித வளா்ச்சியை ஊக்குவிக்கும் அதன் தனித்துவமான கல்வி முறை ஆகியவைகள் குறித்து கேட்டறிந்தனா்.
நிகழ்ச்சியில் புதுச்சேரிஅரசு முதன்மைச் செயலா் சரத் செளகான், அரசுச் செயலா் ஏ.முத்தம்மா, ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு செயல் அதிகாரி ஜி.சீதாராமன் மற்றும் ஆரோவில் பணிக்குழு உறுப்பினா்கள் ஜோசப், அனுராதா, செல்வம், அருண் ஆகியோா் உடனிருந்தனா்.