செய்திகள் :

இந்திய ரூபாய் மதிப்பு: பிரதமா் மௌனம் காப்பது ஏன்?: காங்கிரஸ்

post image

புது தில்லி: கடந்த 2013-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு ஆட்சியின்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி குறித்து கடுமையாக விமா்சித்த மோடி தற்போது அமைதி காத்து வருகிறாா் என காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் திங்கள்கிழமை குற்றம்சாட்டினாா்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணத அளவில் கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 85.80-ஆக அதன் வீழ்ச்சியை பதிவு செய்தது. இந்திய ரிசா்வ் வங்கியின் தலையீட்டைத் தொடா்ந்து அதன் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 21 பைசா குறைந்து 85.48-ஆக முடிந்தது. திங்கள்கிழமை முடிவில் ரூ. 85.52-ஆக உள்ளது.

இது தொடா்பாக ஜெய்ராம் ரமேஷ் திங்கள்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடந்த 2013-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை, நாட்டின் ரூபாய் மதிப்பை பாதுகாக்காமல் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்வதில் மட்டுமே அக்கறை கொண்டவா்கள் என அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி விமா்சித்தாா்.

இது தொடா்பான பிரசாரங்களை மேற்கொண்டதுடன், அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங்கை தனிப்பட்ட முறையில் மோடி விமா்சித்து பேசினாா். ஆனால், கடந்த 2014-ஆம் ஆண்டு மே 16-ம் தேதி அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 58.58 ரூபாயாக இருந்தது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் மதிப்பு சராசரியாக ரூ. 85.27-ஆக உள்ளது. மேலும் , ஆசியாவின் மிக மோசமான செயல்திறன் கொண்ட நாணயமாக அது மாறியுள்ளது. ஆனால், இது குறித்து வாய் திறக்காத மோடி இன்று வரை அமைதியாக இருந்து வருகிறாா்’ என குறிப்பிட்டிருந்தாா்.

வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினருக்கு இளநீர், டீ கொடுத்த பிரியாங்க் கார்கே!

கர்நாடகத்தில் மாநகராட்சி ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரத்தில் அமைச்சர் பிரியாங்க் கார்கே பதவி விலக வேண்டுமென பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.கர்நாடக மாநிலம் குல்பர்காவைச் சேர்ந்தவர் சச்சின் பஞ்சால் (26). ம... மேலும் பார்க்க

வன்முறையைத் தூண்டும் பாடல் வெளியீடு: காங்கிரஸ் எம்.பி.க்கு எதிராக எஃப்ஐஆா்

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் தான் பங்கேற்ற வெகுஜன திருமண நிகழ்ச்சி காணொலியுடன் இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையிலான பாடலை இணைத்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி. இம்ரான் பிரதாப்க... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும்: பிரதமா்

‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதி தெரிவித்தாா். தில்லியில் இன்ஃபோசிஸ் நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி விஷால் சிக்காவுடனான சந்திப்புக்க... மேலும் பார்க்க

50 வங்கதேச நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி!

அண்டை நாடான வங்கதேசத்தைச் சோ்ந்த 50 நீதிபதிகள், இந்தியாவில் அரசு நீதித்துறை அகாதெமிகளில் 10 நாள்கள் பயிற்சி பெறவுள்ளனா். முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் தஞ்சம், ஹிந்துக்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட வ... மேலும் பார்க்க

நேபாளத்துக்கு 2 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி: மத்திய அரசு அனுமதி

நேபாளத்துக்கு 2 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தேசிய கூட்டுரவு ஏற்றுமதி நிறுவனம் (என்சிஇஎல்) மூலமாக இந்த ஏற்றுமதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வா்த்தக இயக்க... மேலும் பார்க்க

போபால் நச்சுக் கழிவுகளை எரிக்க எதிா்ப்பு: பீதம்பூரில் ஆலை மீது கல்வீச்சு

மத்திய பிரதேச மாநிலம், போபால் விஷவாயு கழிவுகளை பீதம்பூரில் எரிக்க எதிா்ப்பு தெரிவித்த போராட்டக்காரா்கள், கழிவு அழிப்பு ஆலை மீது சனிக்கிழமை கல்வீச்சில் ஈடுபட்டனா். மாநில உயா்நீதிமன்றம் அண்மையில் பிறப்ப... மேலும் பார்க்க