செய்திகள் :

இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸின் இலக்கு இதுதான்; ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

post image

இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸின் இலக்கு என்ன என்பது குறித்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இன்று (மார்ச் 22) தொடங்குகிறது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.

இதையும் படிக்க: ரோஹித்துக்கு இருக்கும் சுதந்திரம் கோலிக்கு இல்லை..! முன்னாள் ஆஸி. கேப்டனின் விரிவான பேட்டி!

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறும் நிலையில், மற்ற அணிகள் தங்களது போட்டிகளுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

பஞ்சாப் கிங்ஸின் இலக்கு என்ன?

ஐபிஎல் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் கோப்பையை வெல்வதே பஞ்சாப் கிங்ஸின் உடனடி இலக்கு எனவும், பஞ்சாப் கிங்ஸ் அணியை சிறந்த அணியாக உருவாக்குவதே அடுத்த இலக்கு எனவும் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பஞ்சாப் கிங்ஸின் இலக்கு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது. இதுவரை விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிகளிலேயே மிகவும் சிறந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை உருவாக்கப் போகிறோம் என முதல் நாள் பயிற்சியின்போது, பஞ்சாப் கிங்ஸ் வீரர்களிடத்தில் கூறினேன். அந்த பயணத்தில்தான் நாங்கள் இருக்கிறோம். ஆனால், இந்த மாற்றம் ஒரே நாளில் வந்துவிடாது. அதனை வீரர்கள் தங்களது கடின உழைப்பால் உருவாக்க வேண்டும் என்றார்.

இதையும் படிக்க: கிரிக்கெட் பந்தின் மீது உமிழ்நீரைப் பயன்படுத்த அனுமதித்தது நல்லதா? வில்லியம்சன் குழப்பம்!

பஞ்சாப் கிங்ஸ் அணி மார்ச் 25 ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறும் அதன் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது.

மின்னல் வேகம், கூர்மையான பார்வை; எம்.எஸ்.தோனியின் ஸ்டம்பிங்கை புகழ்ந்த மேத்யூ ஹைடன்!

எம்.எஸ்.தோனி தனது மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் சூர்யகுமார் யாதவை ஆட்டமிழக்கச் செய்ததை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பாராட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத... மேலும் பார்க்க

லக்னௌக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு; அணியில் கே.எல்.ராகுல் இல்லை!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும்... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது எப்படி? என்ன சொல்கிறார் ரச்சின் ரவீந்திரா?

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரச்சின் ரவீந்திரா பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று முன் தினம் (மார்ச் 22) தொடங்கியது. ஐபிஎல் தொடர... மேலும் பார்க்க

ருதுராஜ் எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் நான் இருக்கிறேனா? எம்.எஸ்.தோனி கூறியதென்ன?

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று முன் தினம் (மார்ச் 22) தொடங்கியது. ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ... மேலும் பார்க்க

வர்ணனையில் இனவெறி கருத்து! சிக்கலில் ஹர்பஜன் சிங்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சரை இனவெறி கருத்துகளால் விமர்சித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு கண்டனம் எழுந்துள்ளது.இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன... மேலும் பார்க்க

சென்னை - பெங்களூரு போட்டி: நாளை டிக்கெட் விற்பனை!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செவ்வாய்க்கிழமை காலை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.18-வது ஐபிஎல் தொடர் சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கிய ந... மேலும் பார்க்க