4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்
``இந்த வெற்றிக்குக் காரணம்..'' - ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடியின் மன்கிபாத் உரை!
`ஆபரேஷன் சிந்தூர்'-க்குப் பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று `மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இந்த உரையின்போது, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) இந்திய ஆயுதப் படைகளால் அழிக்கப்பட்ட தளங்களின் படங்களை காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், ``எல்லையைத் தாண்டிய பயங்கரவாத உள்கட்டமைப்பை இந்தியப் படைகள் தாக்கியது அசாதாரணமானது.

பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையையும் சக்தியையும் செலுத்தியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நமது உறுதி, தைரியத்துக்கான இந்தியாவின் படம். இந்தியாவின் வளர்ந்து வரும் வலிமைக்கான தெளிவான அடையாளம். இன்று முழு நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது.
'ஆத்மநிர்பர் பாரத்' உணர்வைப் பின்பற்றி, இந்தியாவின் உள்நாட்டில் வளர்க்கப்பட்ட பாதுகாப்புத் திறன்களே, இந்த வெற்றிக்குக் காரணம்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் சக்தியால் நமது வீரர்களால் நிகழ்த்தப்பட்ட துணிச்சல் இது." எனப் பாராட்டியிருக்கிறார்.