செய்திகள் :

`இனி யாசகம் செய்யக் கூடாது; மீறிச் செய்தால்...' - கடும் உத்தரவை பிறப்பித்த இந்தூர் மாவட்ட நிர்வாகம்

post image

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் மாவட்ட நிர்வாகம், யாசகர்கள் இல்லாத நகரத்தை உருவாக்க ஜனவரி 1 முதல் புதிய முயற்சியில் இறங்கவிருக்கிறது. அதாவது, இந்தூர் நகரில் ஜனவரி 1 முதல் யாசகர்களுக்கு யாராவது யாசகம் செய்தால் அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்படும் என இந்தூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

யாசகம்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தூர் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங், ``இந்தூரில் யாசகம் எடுப்பதற்கெதிராக மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. யாசகம் எடுப்பதற்கெதிரான எங்களின் பிரசாரமும் இம்மாதம் இறுதிவரையில் நடைபெறும்.

அதோடு, வரும் ஜனவரி 1 முதல் யாராவது யாசகம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். யாசகம் செய்வதன் மூலம் பாவத்தில் பங்கெடுக்க வேண்டாம் என இந்தூரில் வசிப்பவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், அது அவர்களை அப்படியே பழக்கப்படுத்தும். மக்களை யாசகம் எடுக்கவைக்கும் பல்வேறு கும்பலை மாவட்ட நிர்வாகம் சமீப காலங்களில் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. மேலும், மீட்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன." என்று தெரிவித்தார்.

எஃப்.ஐ.ஆர்

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ், யாசகர்கள் இல்லாத நகரங்களை உருவாக்கும் ஒரு முன்னோடி திட்டத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நகரங்களில் இந்தூர் நகரமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga

Ilaiyaraja: `இவர்கள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படுவதில்லை' - இளையராஜா விவகாரத்தில் அறநிலையத்துறை

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்ற இசைஞானி இளையராஜா கோயில் கருவறைக்குள் நுழைய முயன்றபோது ஜீயர் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை விளக்கமளித... மேலும் பார்க்க

இந்தியா வந்திருக்கும் இலங்கை அதிபர்... அமைச்சர்களுடன் பேசியதென்ன?

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றப் பிறகு, அனுரகுமார திஸாநாயக்க முதல் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்திருக்கிறார். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.... மேலும் பார்க்க

சாலையில் ஓடும் கழிவுநீர்; துர்நாற்றத்தால் முகம் சுளிக்கும் மக்கள்-கண்டுகொள்ளுமா காரைக்குடி நகராட்சி?

கடந்த ஒரு வாரமாக காரைக்குடியில் பெய்த மழையால் பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில இடங்களில் தண்ணீர் தேங்கி, குடியிருப்புப் பகுதிகள் குளம் போல காட்சியளிக்கிறது. அதே போன்று பாதாள சாக்கடைக... மேலும் பார்க்க

சுட்டிக்காட்டிய விகடன்; மத்திய கைலாஷ் சாலையில் மூடப்பட்ட வடிகால்; நடவடிக்கை எடுத்த மாநகராட்சி!

சென்னையின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரதான வல்லபாய் பட்டேல் சாலையில் மத்திய கைலாஷ் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், அடையார் மற்றும் டைடல் பார்க் பகுதிகளிலிருந்து இருந்து வரும் வாகன... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: கட்டி முடித்தும் திறக்கப்படாத கட்டணமில்லா கழிவறை; பெண்கள் அவதி!

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகே, நகராட்சி சார்பில் பெண்களின் நலன் கருதி `கட்டணமில்லா சிறுநீர் கழிப்பிடம்' புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கழிவறை முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டும்,... மேலும் பார்க்க