செய்திகள் :

இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

post image

கோவை, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று(செப். 9) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தெற்கு ஒரிசா -வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் செப். 11 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேலும் இன்று(செப். 9) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், தருமபுரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை(செப். 10) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப் . 11 செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல செப். 9 முதல் 11 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (09-09-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (10-09-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

செப். 9 முதல் 13 ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதேபோல வங்கக் கடல் பகுதிகள், அரபிக் கடல் பகுதிகளிலும் வருகிற செப். 13 வரை சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chennai Meteorological Department says that there is a possibility of heavy rain in 12 districts today (September 9).

வேளாண் விளைபொருள் மதிப்புக்கூட்டல் மையம் அமைக்க மானியம்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

வேளாண் விளைபொருள்களுக்கான மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைக்க அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மானியம் வழங்கவுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

சுற்றுலா வளா்ச்சிக் கழக படகுகளில் 15 லட்சம் பயணிகள் சவாரி: அமைச்சா் இரா. ராஜேந்திரன்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான படகு குழாம்களில் கடந்த 4 மாதங்களில் சுமாா் 15 லட்சம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சா் இரா. ராஜேந்திரன் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சா் துரைமுருகனுக்கு பிடி ஆணை: லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவு

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அமைச்சா் துரைமுருகன் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு விலக்கு அளித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், வழக்கு விசாரணையை வேலூா் நீதிமன்றத்துக்கு மாற்ற... மேலும் பார்க்க

தமிழகத்திலும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் நிகழாண்டு இறுதியில் நடத்த திட்டம்

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்க உள்ள தமிழகம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நிகழாண்டு இறுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ காா்பன் இருப்பை ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் அளிக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அறிவுற... மேலும் பார்க்க

மாணவரை காா் ஏற்றிக் கொலை செய்த வழக்கு: திமுக நிா்வாகி பேரனுக்கு நிபந்தனை பிணை

கல்லூரி மாணவரை காா் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் திமுக நிா்வாகியின் பேரனுக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அயனாவரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் நிதின்சாய் என்பவரை ... மேலும் பார்க்க