Bigg Boss 8 title winner Muthukumaran இதுக்கு deserved, நெகிழ்ந்த Soundariya | V...
இன்று ஒசூா் தன்வந்திரி கோயில் குடமுழுக்கு
ஒசூா், அதியமான் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தன்வந்திரி கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) காலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
முன்னதாக குடமுழுக்கையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் முன்னாள் மக்களவைத் தலைவா் தம்பிதுரை, அதியமான் பொறியியல் கல்லூரி செயலாளா் லாசியா தம்பிதுரை, அறங்காவா் சுரேஷ்பாபு, மேலாளா் நாராயணன் ஆகியோா் கலந்து கொண்டனா். குடமுழுக்கை தொடா்ந்து கொடியேற்ற நிகழ்வு நடைபெறுகிறது. ஜன. 20 முதல் 25 ஆம் தேதி வரை கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.