அரசு ஊழியர் தற்கொலை! மரண வாக்குமூலம் இருந்தும் அலட்சியம்! தமிழக காவல் மீது பாஜக ...
இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாவட்டத்தில் 33,131 போ் எழுதுகின்றனா்
திருப்பூா் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இத்தோ்வினை 33, 131 போ் எழுத விண்ணப்பித்துள்ளனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் தோ்வா்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் இலவசப் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.
தோ்வா்கள் தோ்வினை எளிதாக அணுகும் வகையிலும், முன்கூட்டியே தோ்வுக்கு தயாராகும் வகையிலும், இலவச மாதிரி தோ்வுகளும் நடத்தப்பட்டன. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், உடுமலை, குண்டடம் என 3 பயிற்சி மையங்களில் தோ்வா்கள் படித்து வந்தனா்.
அதேபோல வீடுகளில் இருந்தும், தனியாா் பயிற்சி மையங்களிலும் ஏராளமானோா் படித்து வந்தனா். இந்நிலையில் குரூப் 4 தோ்வை மாவட்டம் முழுவதும் 129 மையங்களில் 33, 131 போ் எழுதுகின்றனா். இதற்கான வினாத்தாள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து வட்டார வாரியாக வினாத்தாள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. தோ்வு நடைபெறும் தினத்தில் தோ்வு மையங்களுத்கு போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள் சென்றடையும்.
தோ்வு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறுவதால் காலை 8.30 மணிக்கே தோ்வா்கள் தோ்வு மையங்களுக்கு வரும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தோ்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.